ஜனவரி 23, சென்னை (Kitchen Tips): பனீர் வைத்து பலவிதமான ரெசிபிகளை செய்து சாப்பிடலாம். அந்தவகையில், பூண்டு பனீர் மிக சுவையாக இருக்கும். இது செய்வது மிகவும் சுலபம் மற்றும் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். இது சப்பாத்தி, நான், ரொட்டி போன்றவற்றுக்கு ஒரு சிறந்த சைடிஷ் ஆக இருக்கும். அப்படிப்பட்ட சுவையான பூண்டு பனீர் (Garlic Paneer) எப்படி செய்வது என்று இப்பதிவில் பார்ப்போம். Mealmaker Varuval Recipe: அட்டகாசமான சுவையில் மீல்மேக்கர் வறுவல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
பனீர் - 200 கிராம்
பூண்டு - 12 பல்
தக்காளி - 1
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
தனியா தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
- முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பூண்டைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- அடுத்து, இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி மசியும் வரை வதக்கவும்.
- பின்னர், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கிய, சிறிது தண்ணீர் சேர்த்து மசாலா பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட வேண்டும்.
- இப்போது, நறுக்கிய பனீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக கலக்கவும். பின்னர், 7 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க வைத்து கொத்தமல்லித் தழை தூவிவிடவும். அவ்வளவுதான் சுவையான பூண்டு பனீர் தயார்.