Green Kurma (Photo Credit: YouTube)

நவம்பர் 09, சென்னை (Kitchen Tips): நமக்கு நம் உடலிலேயே நோய் எதிர்ப்பு சக்தி தேவை. அதனால் நாம் உண்ணும் உணவுகளில் எதிர்ப்புசக்தி தரக்கூடிய பொருட்களை சேர்த்து ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தவகையில், சத்தான நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய பொருட்களை சேர்த்து ருசியான வெஜ் குருமா எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - அரை கப்

கேரட் - கால் கப்

பீன்ஸ் - கால் கப்

உருளைக்கிழங்கு - அரை கப்

குடைமிளகாய் - கால் கப்

தக்காளி - 1 . Veg Oats Soup Recipe: மணமும் சுவையும் நிறைந்த வெஜ் ஓட்ஸ் சூப் செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ..!

அரைக்க தேவையானவை:

பட்டை - 1 இன்ச்

லவங்கம் - 3

இஞ்சி துண்டு - 1 இன்ச்

கல்பாசி - ஒரு துண்டு

பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி

சோம்பு - அரை கரண்டி

கசகசா - 1 கரண்டி

கரம் மசாலா - அரை கரண்டி

முந்திரிப்பருப்பு - 6

பச்சை மிளகாய் - 3

தேங்காய்த்துருவல் - முக்கால் கப்

புதினா இலை - 1 கைப்பிடி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

  • முதலில் மேற்கூறிய எல்லா காய்கறிகளையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை பட்டாணியை கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • புதினாவை மேலாக கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும். தேங்காய் பொட்டுகடலை மற்ற பொருட்களை எடுத்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு, அதில் முந்திரி பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, புதினா இலை ஆகியவற்றை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய், பொட்டுகடலை, பட்டை, லவங்கம், கல்பாசி, கசகசா, சோம்பு ஆகிய அரைக்க கூறிய எல்லா பொருட்களையும், வதக்கிய புதினா மிளகாய் கலவையுடன் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போது, அதே பாத்திரத்தில் மீதி எண்ணையை சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை முதலில் நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, குடைமிளகாய் அனைத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
  • தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்த்து மூடி வைத்து நன்கு வேகவிடவும். காய் நன்கு வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை வெந்த காயில் சேர்க்கவும். மூடி வைத்து 3 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான வெஜ் குருமா ரெடி.