ஜூன் 21, சென்னை (Kitchen Tips): முக்கனிகளில் ஒன்றாக திகழக் கூடிய பலாப்பழ சுவைக்கு அடிமை ஆகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதன் சுவை மிகவும் இனிப்பாக இருக்கும். இந்த பலாப்பழத்தை வைத்து சுவையான முறையில் பலாப்பழ இட்லி (Jackfruit Idli) எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பலாப்பழம் - 10
வெல்லம் - அரை கப்
துருவிய தேங்காய் - கால் கப்
பச்சரிசி - அரை கப்
ஏலக்காய் - 2
உப்பு - தேவையான அளவு. College Students Attack Ice Vendor: குடிபோதையில் ஐஸ் வியாபாரியை தாக்கிய 3 கல்லூரி மாணவர்கள் கைது; 3 பேர் தலைமறைவு..!
செய்முறை:
முதலில் பச்சரிசியை சுத்தம் செய்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர், தேங்காயை துருவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளவும். பலாப்பழத்தை கொட்டையை நீக்கி பொடியாக நறுக்கிக் கொண்டு, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, இதனுடன் பொடித்த வெல்லம், துருவிய தேங்காய், ஏலக்காய் இவை மூன்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதோடு, ஊற வைத்திருக்கும் பச்சரிசியையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
மாவு கெட்டியாக தான் இருக்க வேண்டும். தண்ணியாக இருக்கக் கூடாது. இப்பொழுது இந்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். பிறகு, வாழை இலையை சிறிது சிறிதாக நறுக்கி அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த வாழை இலையை அப்படியே மடித்து இட்லி தட்டில் உள்ளே வைத்து, 10 நிமிடம் வேகவைத்த பிறகு அதை எடுத்து இலையைத் திறந்து பார்த்தால் மிகவும் சுவையான பலாப்பழ இட்லி தயார்.