![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/images/2025/02/thattai-payaru-sadam-recipe.jpg?width=380&height=214)
பிப்ரவரி 13, சென்னை (Kitchen Tips): உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த பயிறு வகைகளை குழம்பு வைத்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். இதனை ஒரு கலவை சாதம் போல செய்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவர். சாதத்தோடு சேர்த்து சத்து நிறைந்த பயிறு வகைகளும் வயிற்றுக்குள் சென்றுவிடும். அருமையான சுவையில் சத்தான தட்டைபயிறு சாதம் (Thattai Payaru Sadam) எப்படி செய்வது என்பதை இப்பதிவில் காண்போம். Pea Gravy Recipe: சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி கிரேவி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
தட்டைப்பயறு - முக்கால் கப்
கடலைப்பருப்பு - 1 கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 கரண்டி
எண்ணெய் - 2 கரண்டி
கடுகு - 1 கரண்டி
சீரகம் - 1 கரண்டி
மிளகு - அரை கரண்டி
பூண்டு - 7 பல்
பச்சை மிளகாய் - 4
பச்சரிசி - 1 கப்
மிளகாய்தூள் - ஒன்றரை கரண்டி
மஞ்சள்தூள் - அரை கரண்டி
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 2
கருவேப்பிலை - சிறிதளவு
மல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு
தண்ணீர் - 3 கப்
உப்பு - 1 கரண்டி
நெய் - 1 கரண்டி
செய்முறை:
- முதலில் தட்டைப்பயறை 2 மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர், குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, மிளகு மற்றும் சீரகம் போட்டு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு பச்சை மிளகாய், மற்றும் கருவேப்பிலை சேர்த்து கலந்து வதக்க வேண்டும்.
- வதங்கியதும், ஊறவைத்த தட்டைப்பயறை சேர்த்து கலந்துவிட்டு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கி, பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து தக்காளி மிருதுவாகும் வரை வதங்கி வெந்ததும் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும் ஒரு மணி நேரம் ஊறிய அரிசியை சேர்த்து கலந்து விடவும்.
- பிறகு, உப்பு சரிபார்த்து நெய், மல்லித்தழை சேர்த்து கலந்துவிட்டு குக்கரை மூடிபோட்டு 3 விசில் வரும்வரை வேகவைத்து இறக்க வேண்டும். பின் மூடியை திறந்து சிறிது பிரட்டி விட்டு எடுத்து சாப்பிட்டால் சுவையான தட்டப்பயறு சாதம் ரெடி.