அக்டோபர் 11, சென்னை (Kitchen Tips): சுரைக்காயில் (Calabash) நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த காய்கறியை அதிகம் உணவில் சேர்த்து வருவது உடலுக்கு நல்லது. அதுவும் மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் வகையில் சுரைக்காயைக் (Sorakkai) கொண்டு பருப்பு குழம்பு செய்தால், மிகவும் சுவையாக இருக்கும். சுரைக்காய் பருப்பு குழம்பு (Sorakkai Paruppu Kuzhambu) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் - அரை (நறுக்கியது)
பாசிப் பருப்பு - அரை கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
வரமிளகாய் - 3
சாம்பார் பவுடர் - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு. Masala Sundal Recipe: ஆயுத பூஜைக்கு சுவையான மசாலா சுண்டல் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
செய்முறை:
- முதலில் சுரைக்காயை நன்கு கழுவி உள்ள விதைகளை நீக்கிவிட்டு, துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
- பின்னர் பாசிப்பருப்பை நீரில் நன்கு கழுவி, அதை குக்கரில் போட்டு, அத்துடன், தக்காளி சேர்த்து 3 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
- பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகத்தை சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம், வரமிளகாய் சேர்த்து, வெங்காயத்தை பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- பிறகு குக்கரில் உள்ள பாசிப்பருப்பு மற்றும் சுரைக்காய் துண்டுகளை போட்டு, அதோடு மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே நெய் ஊற்றினால், சுவையான சுரைக்காய் பருப்பு குழம்பு ரெடி.