Milagu Rasam (Photo Credit: YouTube)

நவம்பர் 03, சென்னை (Kitchen Tips): மழைக் காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் தொல்லை இருக்கும். அப்போது மருந்து கசாயம், கஞ்சி, ரசம் செய்து சாப்பிடுவோம். அந்தவகையில் மிளகு, சீரகம், பூண்டு போன்றவற்றைப் பயன்படுத்தி செய்யக்கூடிய ரசம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்கு சக்தியை அளிக்கும். மிளகு, பூண்டு போன்றவற்றில் உள்ள சத்துக்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. அப்படிப்பட்ட மிளகு ரசம் (Milagu Rasam Recipe) எப்படி செய்வது என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம். Chettinad Mutton kuzhambu: செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி?.. சண்டே ஸ்பெஷல் ரெசிபி.!

தேவையான பொருட்கள்:

  • மிளகு - 4 மேசைக்கரண்டி
  • சீரகம் - 4 மேசைக்கரண்டி
  • தக்காளி - 4
  • பச்சை மிளகாய் - 3
  • பூண்டு, பெருங்காயத்தூள் - சிறிதளவு
  • கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

மிளகு ரசம் செய்முறை:

  • முதலில் மிளகு, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் போன்றவற்றை மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பின்னர், ஒரு பாத்திரத்தில் புளி கரைசலை எடுத்துக்கொண்டு, அதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து தாளித்து, அதில் அரைத்து வைத்து மிளகு கரைசலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இதனுடன், சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். சிறிதளவு மஞ்சள் தூளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
  • பின்பு, இதனுடன் புளி கரைசல், தக்காளி கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். குறிப்பாக, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். அதிகமாக கொதிக்க வைக்க வேண்டாம்.
  • இறுதியில், அதன்மேல் கொத்தமல்லி இலைகளை தூவிவிட்டு இறக்கவும். அவ்வளவுதான், சுவையான, சூடான, காரசாரமான மிளகு ரசம் தயார்.