Mushroom Pakoda Recipe (Photo Credit: YouTube)

அக்டோபர் 24, சென்னை (Kitchen Tips): பொதுவாக மழை காலங்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் சூடாக மொறுமொறுப்பாக எதாவது சாப்பிட தோன்றும். எப்போதும் போல, வடை, பஜ்ஜி, போண்டா என்று இல்லாமல் சற்று வித்தியாசமாக பக்கோடா ரெசிபி செய்து சாப்பிடலாம். அந்தவகையில், காளான் வைத்து சுவையான, சூடான மொறு மொறு காளான் பக்கோடா (Mushroom Pakoda Recipe) எப்படி செய்வது என்பதை இப்பதிவில் காண்போம். பொதுவாகவே, காளான் சாலையோர கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும். அப்படிப்பட்ட காளானை கொண்டு வீட்டிலேயே சுலபமான முறையில் காளான் பக்கோடா செய்யலாம். Health Tips: மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? காய்ச்சல் விட்டு ஓடணுமா? டிப்ஸ் உள்ளே.!

தேவையான பொருட்கள்:

  • காளான் - 200 கிராம்
  • வெங்காயம் - 1
  • அரிசி மாவு - கால் கப்
  • சோள மாவு - கால் கப்
  • கடலை மாவு - 1 கப்
  • மிளகாய் தூள் - 2 கரண்டி
  • பச்சை மிளகாய் விழுது - 1 கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - அரை கரண்டி
  • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    காளான் பக்கோடா செய்முறை:

  • முதலில் காளான் மற்றும் வெங்காயத்தை நன்கு சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பின்னர், கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இதில் பொடியாக நறுக்கிய காளான் சேர்த்து வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்.
  • அரிசி மாவு, கடலை மாவு, சோள மாவு ஆகியவற்றை சல்லடையில் சலித்து தூசி நீக்கி, ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • இதன்பின்னர், வறுத்த காளான் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பதமாக பிசைந்துக் கொள்ளவும். காளான் பக்கோடா செய்ய மாவு ரெடி.
  • அடுத்து, கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும். எண்ணெய் நன்கு கொதித்ததும், இதில் பக்கோடா மாவினை உதிர்த்து சேர்த்து, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான், சூடான மொறு மொறுப்பான காளான் பக்கோடா தயார்.