அக்டோபர் 19, சென்னை (Kitchen Tips): நம் வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான ஸ்டைலில் முட்டை குழம்பு வைத்திருப்போம். ஆனால், சற்று வித்தியாசமாக உடலுக்கு வலு சேர்க்கும் வகையில், நாட்டுக்கோழி முட்டை வைத்து சுவையாக குழம்பு எப்படி செய்வது என்பதை இதில் பார்க்கலாம். நாட்டுக்கோழி முட்டை குழம்பு (Nattu Kozhi Muttai Kuzhambu) சுவையாகவும், சிக்கன் குழம்பு சுவையை மிஞ்சும் அளவுக்கு ருசியாக இருக்கும். Vatha Kuzhambu Sadam Recipe: ருசியான வத்தக்குழம்பு சாதம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
முட்டை - 5
வரமிளகாய் - 5
சோம்பு, சீரகம், மிளகு - தலா அரை தேக்கரண்டி
பட்டை - 2
லவங்கம் - 3
பெரிய வெங்காயம் - 300 கிராம் (நறுக்கியது)
தக்காளி - 200 கிராம் (நறுக்கியது)
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, லவங்கம் சேர்த்து, சோம்பு, சீரகம், மிளகு சேர்த்த பின் வரமிளகாய், கொத்தமல்லி சேர்த்து வதக்க வேண்டும்.
- அடுத்து நறுக்கிய பெரிய வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இடையில் வேக வைத்த முட்டையை தோல் நீக்கி வைக்கவும். வெங்காயம் வெந்த பிறகு நறுக்கிய தக்காளி, புதினா சேர்க்கவும். இப்போது, இந்த கலவையை தனியாக எடுத்து வைக்கவும்.
- பின் ஒரு கடாயில் மீண்டும் எண்ணெய் ஊற்றி வேக வைத்த முட்டையை போடவும். அதில் மஞ்சள், உப்பு சேர்த்து பொறிக்கவும். அதனை தனியாக எடுத்து வைக்கவும். முன்பு வதக்கி வைத்த கலவையை அம்மியில் வைத்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இப்போது மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அரைத்து வைத்த மசாலா, தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு முட்டை சேர்க்கவும். அவ்வளவுதான் சுவையான நாட்டுக்கோழி முட்டை குழம்பு ரெடி.