மே 29, சென்னை (Kitchen Tips): மாலை வேளையில் வீட்டில் வடை, பஜ்ஜி ஆகிய வகைகளில் செய்து சாப்பிடுவதை தவிர்த்து, ஆரோக்கியமாக புட்டு செய்து சாப்பிடுவது நம் உடலுக்கு நல்லது. அதில் எப்போதும் போல அரிசி மாவை கொண்டு புட்டு செய்யாமல், ராகி, சோளம் போன்றவற்றைப் பயன்படுத்தி செய்து சாப்பிடலாம். அந்த வகையில் சோளம் கொண்டு எப்படி புட்டு (Corn Puttu) செய்வது என்பதை இதில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சோள ரவை, அரிசி மாவு, துருவிய தேங்காய் - தலா 1 கப்
சர்க்கரை - 1 மேசைக்கரண்டி
வெதுவெதுப்பான தண்ணீர் - முக்கால் கப்
உப்பு - தேவையான அளவு. Samsung Galaxy M35 5G: சாம்சங் கேலக்ஸி M35 5G ஸ்மார்ட் போன் அறிமுகம்..! அதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
செய்முறை:
முதலில் சோள ரவையை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ளவும். பின்னர், இதனை ஒரு பவுலில் போட்டுக்கொள்ள வேண்டும்.
அதில் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, சர்க்கரை சேர்த்து, அதனுடன் வெதுவெதுப்பான நீரை ஊற்றி புட்டு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
பின், இட்லி பாத்திரத்தை எடுத்து, அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து கொதிக்கவிட வேண்டும். பிறகு, இட்லி தட்டில் ஈரத் துணியை விரித்து, அதில் புட்டு மாவை தூவி தனியாக வைத்துக்கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தில் உள்ள தண்ணீர் கொதிந்த பிறகு மூடியைத் திறந்து, அதில் இட்லி தட்டை வைத்து மீண்டும் மூடி வேகவைத்து இறக்கவும். இறுதியில், அதன் மேல் துருவிய தேங்காயை போட்டு பிரட்டி பரிமாறினால், சுவையான சோள புட்டு ரெடி.