மே 29, சென்னை (Technology News): சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி M35 5ஜி ஸ்மார்ட் போன் (Samsung Galaxy M35 5G Smart Phone) பிரேசிலில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. Galaxy M35 5G விவரக்குறிப்புகளில் Exynos 1380 SoC, 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 50MP முதன்மை கேமரா என இவை அனைத்தும் மிக முக்கிய சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
இதன், 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய ஒற்றை வேரியண்டின் விலை BRL 2,700. இந்திய மதிப்பில் ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.43,400 ஆகும். தற்போது பிரேசிலில் 10% தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இது அடர் நீலம், வெளிர் நீலம் மற்றும் சாம்பல் வண்ணங்களில் வந்துள்ளது. Man Arrested For Running Naked Inside Flight: ஆடையை அவிழ்த்து போட்டு, விமானத்தில் நிர்வாணமாக ஓடி அதிர்ச்சி தந்த பயணி; நடுவானில் களேபரம்..!
சிறப்பம்சங்கள்:
இதில் 6.6-இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, போனின் ஹூட்டின் கீழ் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதியுடன் இணைக்கப்பட்ட Exynos 1380 சிப்செட் உடன் இயங்குகிறது. இதில், பஞ்ச்-ஹோல் கேமரா மற்றும் தட்டையான விளிம்புகளுடன் மிகவும் பிரீமியமாகத் தெரிகின்றது. Galaxy M34 5G-யில் Exynos 1280-லிருந்து வேகமான Exynos 1380 உடன் சிப்செட் மேம்படுத்தப்பட்டுள்ளது. சாம்சங், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உடன் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 50MP முதன்மை கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா, செல்பி கேமரா 13MP சென்சார் உடன் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6,000mAh பேட்டரி திறன் கொண்ட 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் வந்துள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான One UI 6.1 அடுக்குடன் இயங்குகின்றது.