
பிப்ரவரி 21, சென்னை (Kitchen Tips): குழந்தைகள் மாலை நேரத்தில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஓர் இனிப்பு பலகாரத்தை செய்து கொடுக்கலாம். அந்தவகையில், கேசரி பிடிக்குமானால், பால் மற்றும் ரவையைக் கொண்டு பால் ரவா கேசரி செய்து கொடுங்கள். பால் ரவா கேசரி (Paal Rava Kesari) எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம். Banana Appam Recipe: சுவையான இனி்ப்பு அப்பம் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
பால் - 2 கப்
ரவை - அரை கப்
சர்க்கரை - முக்கால் கப்
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
குங்குமப்பூ - சிறிதளவு
நெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
- பின், அதே பாத்திரத்தில் ரவையை சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஒரு தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு, வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை சேர்த்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு, ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ரவையை சேர்த்து தொடர்ந்து கிளறிவிட வேண்டும். பின், அதில் குங்குமப்பூ பாலை சேர்த்து மிதமான தீயில், தொடர்ந்து 1 நிமிடம் கிளறிவிடவும்.
- பின்பு, ரவையானது நன்கு வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கிளறி, சற்று கெட்டியாகும் போது, அதில் நெய் சேர்த்து கிளறிவிட வேண்டும். அடுத்து, அதில் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பால் ரவா கேசரி ரெடி.