
பிப்ரவரி 20, சென்னை (Kitchen Tips): வாழைப்பழங்கள் அதிகம் பழுத்து விட்டால் இவ்வாறு ஸ்வீட் செய்து சாப்பிடலாம். எல்லா பொருள்களும் கைவசம் இருக்கக்கூடியவைதான்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் -2
கோதுமைமாவு-1/2கப்
அரிசிமாவு 1/4 கப்
துருவிய தேங்காய் -2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் -1 கப் துருவியது
நெய் - தேவைகேற்ப
தண்ணீர்-தேவைகேற்ப
ஏலக்காய் பொடி-1 ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை Rava Idli Recipe: அட்டகாசமான சுவையில் ரவை இட்லி செய்வது எப்படி..? மாவு இல்லாத நேரத்தில் டக்குனு பண்ணலாம்..!
செய்முறை:
முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தேவைக்கேற்ப சிறிதளவு தண்ணீர் ஊற்றி , வெல்லத்தை சேர்த்து, கரையும் வரை கொதிக்க விடவும். சற்று ஆற விடவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த வாழைப்பழம் கோதுமை மாவு அரிசி மாவு ,துருவிய தேங்காய்( மெல்லிய சிறு பல்லாகவும் போடலாம்) சிட்டிகை உப்பு, ஏலக்காய் பொடி வெல்லம் சேர்த்து கரைத்து கொள்ளவும். கரைத்த மாவு அப்பம் செய்யக்கூடிய சரியான பதத்தில் இருக்க வேண்டும். குழி பணியார கல்லில் நெய் சேர்த்து இரண்டு பக்கமும் திருப்பி எடுத்தால் சுவையான அப்பம் தயார்.