செப்டம்பர் 20, சென்னை (Kitchen Tips): தமிழ்நாட்டில் உணவுக்கு புகழ் பெற்ற காரைக்குடி சமையல் என்றாலே பலரும் அதனை ஆர்வமாக சுவைத்து மகிழ்வார்கள். அந்தவகையில், காரைக்குடி செட்டிநாடு ஸ்டைலில் பருப்பு உருண்டை குழம்பு (Paruppu Urundai Kuzhambu) ரெசிபியை சுவையாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - அரை கப்
தேங்காய் - முக்கால் கப்
துவரம் பருப்பு - அரை கப்
சோம்பு - 1 கரண்டி
புளி கரைசல் - அரை கப்
மஞ்சள் தூள் - அரை கரண்டி
வெந்தயம் - 1 கரண்டி
கடுகு, உளுந்து - தலா அரை கரண்டி
குழம்பு மிளகாய் தூள் - அரை கப்
வெங்காயம், தக்காளி - தலா 2
பூண்டு - 8 பல்
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 3 கொத்து. Brinjal Milagu Kootu Recipe: கத்திரிக்காய் மிளகு கூட்டு சுவையாக செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி சுமார் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இதன்பிறகு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதனை மிக்சியில் சேர்த்து அதனுடன் சோம்பு, மிளகாய் ஆகியவை சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளி மற்றும் மல்லித்தழையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி அதனை மிக்ஸியில் சேர்த்து தேங்காய் பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இதனையடுத்து, அரைத்த மாவினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், மல்லித்தழை ஆகியவை சேர்த்து உப்பு தூவி நன்றாக பிசைந்துக் கொண்டு சிறிது மாவினை தனியாக வைத்துக்கொள்ளவும்.
- இப்போது அரைத்துள்ள மாவினை ஒரே அளவிலான உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொண்டு, இட்லி தட்டில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, சோம்பு , பூண்டு மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் ஆகியவை சேர்த்து வதக்கவும். பின் அதில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து வதக்கிவிட்டு, அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து, தக்காளி மசியும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- தக்காளி நன்றாக வதங்கிய பிறகு, புளிக்கரைசல் சேர்த்து அரைத்து வைத்துள்ள மாவினை சிறிது சேர்த்து நன்கு கலந்து கொண்டு, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.குழம்பு கொதிக்கும் போது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- பின் குழம்பு சற்று கெட்டியான பிறகு, அதில் வேகவைத்துள்ள உருண்டைகளை சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வைக்க வேண்டும். இறுதியாக அடுப்பில் இருந்து கடாயை இறக்கி பொடியாக நறுக்கி வைத்துள்ள மல்லித்தழையை தூவினால், அருமையான செட்டிநாடு பருப்பு உருண்டை குழம்பு ரெடி.