ஜனவரி 11, சென்னை (Kitchen Tips): பொங்கல் பண்டிகைக்கு சுவையான பொங்கல் ரெசிபிக்கள் (Pongal Special Recipes) பல வகைகள் உள்ளன. அந்தவகையில், உடலுக்கு ஆரோக்கியமும், சத்தும் நிறைந்த கவுனி அரிசி பொங்கல் எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம். இது சாதாரணமாக செய்யும் சர்க்கரை பொங்கலை விட சுவை சூப்பராக இருக்கும். இந்த கருப்பு கவுனி அரிசியில் (Kavuni Arisi Pongal) உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. Pal Pongal Recipe: ருசியான பால் பொங்கல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
கருப்பு கவுனி அரிசி - 1 கப்
பால் - 2 கப்
வெல்லம் - 2 கப்
பாசிப்பருப்பு - கால் கப்
ஏலக்காய் பொடி - அரை கரண்டி
தேங்காய் - அரை கப்
நெய் - 100 மி.லி
உலர் திராட்சை - 20
முந்திரி பருப்பு - 15
பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
செய்முறை:
- முதலில் கருப்பு கவுனி அரிசியை 3 மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். இது சாதாரண அரிசியைப் போல விரைவாக வேகாது. கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும். அதேபோல, பாசிப்பருப்பையும் கடாயில் வறுத்து 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- பின்னர், ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இது நன்கு கொதித்ததும், அதில் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து வேகவைக்க வேண்டும். குக்கரில் செய்வதாக இருந்தால் குறைந்தது 8 விசில் விட்டு இறக்கவும்.
- அரிசி பாதி வெந்ததும் பாசிப்பருப்பை சேர்க்க வேண்டும். அரிசியும், பருப்பும் வெந்ததும், அதில் வெள்ளத்தை சேர்த்து கிளற வேண்டும். வெள்ளத்துடன் அரிசி மற்றும் பருப்பு சேர்ந்து நன்கு குழைய வேண்டும்.
- பின்னர், தேங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றுடன் சேர்த்து நெய்யில் வறுத்து எடுத்து எடுத்துக்கொள்ளவும். அரிசியும் பருப்பும் நன்றாக வெந்ததும், அதில் கொஞ்சமாக நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறிவிடவும்.
- அதில் வறுத்து வைத்துள்ள உலர் திராட்சை, முந்திரி, தேங்காய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இப்போது, அனைத்தையும் நன்கு கிளறி அடுப்பை அணைத்துவிட்டு, நெய் மீதமிருந்தால் அதையும் சேர்த்து விட வேண்டும். இறுதியில், பச்சை கற்பூரத்தை சேர்த்து நன்கு கலந்துவிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சுவையான கவுனி அரிசி பொங்கல் ரெடி.