ஜனவரி 13, சென்னை (Kitchen Tips): பொங்கல் பண்டிகையை (Pongal Special Recipes) சிறப்பாக கொண்டாடி மகிழ அனைவரது வீட்டிலும் சர்க்கரை பொங்கல் சமைப்பது வழக்கம். அந்தவகையில், பாரம்பரிய மிக்க கிராமத்து ஸ்டைலில் மண்பானை பொங்கல் (Paanai Pongal) எப்படி வைப்பது என்பதனை இப்பதிவில் காண்போம். Kavuni Arisi Pongal Recipe: உடலுக்கு வலு சேர்க்கும் கவுனி அரிசி பொங்கல் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - கால் கிலோ
பொடித்த வெல்லம் - ஒன்றை டம்ளர்
பசும்பால் - அரை லிட்டர்
ஏலக்காய் - 4
ஜாதிக்காய் - கால் கரண்டி
சுக்கு - கால் கரண்டி
முந்திரிப்பருப்பு - 15
நெய் - 100 கிராம்
செய்முறை:
- முதலில் பானையில் பாலை காய வைக்கவும். ஊறிய பச்சரிசியை தண்ணீர் கழுவி ஊற்றாமல், அப்படியே களைந்து காய்ந்த பாலில் போடவும். தண்ணீர் சுண்ட சுண்ட நீர் சேர்த்து வேகவிடவும்.
- பால் மற்றும் கழுநீரில் அரிசி நன்கு வெந்தவுடன், பொடித்த வெள்ளம் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, ஒரு சிறிய துண்டு சுக்கை நன்றாக அம்மியில் நசுக்கி எடுத்துக் கொள்ளவும். அந்த பவுடரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு ஏலக்காயை அம்மியில் வைத்து நன்றாக நசுக்கி கொள்ளவும். ஜாதிக்காயை நுணுக்கி எடுத்துக் கொள்ளவும். இவை மூன்றையும் சர்க்கரைப் பொங்கலில் சேர்ந்து கிளரி விடவும். தேவை என்றால் கொஞ்சமாக பச்சை கற்பூரம் சேர்த்துக் கொள்ளலாம்.
- பின்னர், 2 மேசைக்கரண்டி நெய்யில் முந்திரிப்பருப்பை நன்கு வறுத்துக் கொள்ளவும். சர்க்கரைப் பொங்கலில் சேர்த்து கலந்து விடவும். மீதி நெய்யை தங்களுக்கு தேவையான அளவுபொங்கலில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- இப்போது பானைக்கு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து பூஜைக்கு எடுத்துக் கொள்ளவும். புது பானையில் செய்த சர்க்கரை பொங்கல் ரெடி.