Pongal Recipe (Photo Credit: YouTube)

ஜனவரி 14, சென்னை (Kitchen Tips): தமிழர் திருநாளாம் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகையை (Pongal Special Recipes) உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடுவர். பொங்கல் பண்டிகை அன்று, அனைவரது வீட்டிலும் சர்க்கரை பொங்கல் செய்து, சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவித்து உண்டு மகிழ்வர். அந்தவகையில், சர்க்கரை பொங்கல் (Sakkarai Pongal) எப்படி செய்வது என்பதனை பற்றி இப்பதிவில் பார்ப்போம். Paanai Pongal Recipe: பாரம்பரிய மிக்க மண்பானை பொங்கல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 200 கிராம்

பாசிப்பருப்பு - 50 கிராம்

பால் - அரை கப்

பாகு வெள்ளம் - 2 கப்

நெய் - 3 கரண்டி + 7 தேக்கரண்டி

தண்ணீர் - 4 கப் + கால் டம்ளர்

முந்திரி, திராட்சை - சிறிதளவு

லவங்கம் - 3

ஏலக்காய் - 1 தேக்கரண்டி

சாதிக்காய் - 1 சிட்டிகை

உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

  • முதலில் பச்சரிசி, பாசி பருப்பை எடுத்து, தண்ணீரில் நான்கு முறை நன்கு கழுவவும். பின், ஒரு பெரிய குக்கரில் கழுவிய பச்சரிசி மற்றும் பாசி பருப்பை போடவும். இதில் 3 கரண்டி நெய் ஊற்ற வேண்டும்.
  • இதன் பிறகு, அரை கப் பால் எடுத்து குக்கரில் ஊற்றவும். மீண்டும் அதே கப் கொண்டு நான்கு முறை தண்ணீர் எடுத்து குக்கரில் சேர்க்கவும். மிதமான சூட்டில் வைத்து 6 முறை விசில் அடித்தவுடன், அடுப்பை அணைத்து விடவும்.
  • தற்போது, அரிசியை அளவிட பயன்படுத்திய கப் கொண்டு அதில் 2 முறை பாகு வெள்ளம் எடுத்துக் கொள்ளவும். இதன் பின்னர், ஒரு பேனில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். தண்ணீர் கொதித்த பிறகு பாகு வெள்ளத்தை போட வேண்டும்.
  • இதற்கு ஒரு வடிகட்டி பயன்படுத்திய பிறகு, மீண்டும் ஏழு நிமிடங்களுக்கு பாகு வெள்ளத்தை உருக்கவும். ஒரு கம்பி பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
  • ஒரு பெரிய கடாயில் 7 தேக்கரண்டி நெய் ஊற்றி, அது சூடான பிறகு மூன்று லவங்கம், தேவையான அளவு முந்திரி போடவும். முந்திரி பொறிந்தவுடன் வேகவைத்த பச்சரிசி மற்றும் பாசி பருப்பை மொத்தமாக கடாயில் சேர்க்க வேண்டும்.
  • பிறகு, நெய்யுடன் நன்றாகக் கலக்கும்படி கிண்டிவிட்டு காய்ச்சி வைத்திருக்கும் வெள்ளைப் பாகை ஊற்றவும். 8 நிமிடங்களுக்கு இதனை வேகவைக்க வேண்டும். அதன் பின்னர், ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை சாதிக்காய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
  • இறுதியாக, ஒரு சிறிய பாத்திரத்தில் நெய் ஊற்றி திராட்சையை வறுத்து, சர்க்கரை பொங்கலை அடுப்பில் இருந்து எடுத்தபிறகு சேர்க்கவும். அவ்வளவுதான், பொங்கல் பண்டிகைக்கு தித்திப்பான சர்க்கரை பொங்கல் ரெடி.