Sakkarai Pongal Recipe (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் 05, சென்னை (Kitchen Tips): தென்னிந்தியாவின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று சர்க்கரை பொங்கல். இனிப்பும், நறுமணமும் நிறைந்த இந்த சர்க்கரை பொங்கல் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது அரிசி, பருப்பு, வெல்லம் மற்றும் பால் சேர்த்து செய்யப்படும் ஒரு இனிப்பு வகை ஆகும். குறிப்பாக, பொங்கல் பண்டிகையின் போது, வீடுகளில் இது முக்கியமாக செய்யப்படும். அப்படிபட்ட சர்க்கரை பொங்கல் சுவையாக எப்படி செய்வது (How to Make Sakkarai Pongal) என்பதனை இப்பதிவில் பார்க்கலாம். Mysore Pak: நாவில் கரையும் மைசூர் பாக்.. வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி?.!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

வெல்லம் - 2 கப்

பாசிப்பருப்பு - கால் கப்

தண்ணீர் - 4 கப்

ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி

நெய் - அரை கப்

பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை

முந்திரி, உலர் திராட்சை - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை பொன்னிறமாகும் வரை வறுத்து, அதனுடன் பச்சரிசியைச் சேர்த்து நன்கு கழுவ வேண்டும்.
  • இப்போது, குக்கரில் அரிசி மற்றும் பாசிப்பருப்புடன் 4 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி, மிதமான தீயில் 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
  • அதே நேரத்தில், ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, வெல்லம் நன்கு கரையும் வரை காய்ச்சி, வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்ட வேண்டும்.
  • குக்கரில் விசில் வந்ததும், அடுப்பை அணைத்து குக்கரைத் திறந்து, வெந்த அரிசி மற்றும் பருப்பு கலவையை நன்கு மசித்துக் கொள்ளவும். அதில், வடிகட்டிய வெல்லப் பாகைச் சேர்த்து, மிதமான தீயில் வைத்து, கலவை கெட்டியாகும் வரை கிளறவும்.
  • பின், ஒரு சிறிய பாத்திரத்தில் நெய் விட்டு, முந்திரி மற்றும் உலர் திராட்சையை வறுத்து, பொங்கலில் சேர்க்கவும். இறுதியில், ஏலக்காய்த்தூள் மற்றும் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தைச் சேர்த்து நன்கு கலந்து, பரிமாறவும். அவ்வளவுதான் தித்திப்பான சுவையும், நெய்யின் நறுமணமும் நிறைந்த சுவையான சர்க்கரை பொங்கல் தயார்.