ஆகஸ்ட் 04, சென்னை (Kitchen Tips): மைசூர் பாக் என்பது கர்நாடகாவில் இருந்து தோன்றிய ஒரு பாரம்பரிய இனிப்பு வகை ஆகும். இது கடலை மாவு, நெய், சர்க்கரை ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு. மைசூர் பாக், பண்டிகைகள் மற்றும் விசேஷ நாட்களில் வீடுகளில் விரும்பி செய்யப்படுகிறது. அந்தவகையில், வீட்டிலேயே எளிய முறையில் மைசூர் பாக் (How to Make Mysore Pak) எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். Aadi Perukku 2025: ஆடிப்பெருக்கு ஸ்பெஷல்; மாரியம்மனுக்கு பிடித்த கருவாடு குழம்பு, முட்டை குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
சர்க்கரை - 2 கப்
கடலை மாவு - 1 கப்
நெய் - 1 கப்
தண்ணீர் - அரை கப்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும், பாகு பதம் வந்ததும் அடுப்பை அணைக்க வேண்டும்.
- மற்றொரு பாத்திரத்தில், கடலை மாவை சிறிது சிறிதாக நெய் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
- பின், சர்க்கரை பாகை மீண்டும் அடுப்பில் வைத்து, அதனுடன் நெய்யில் கரைத்த கடலை மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளறிவிட வேண்டும்.
- மாவு கலவை கெட்டியாக வரும்போது, மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். கலவை மணல் போன்று வரும்போது, நெய் தனியாக பிரிந்து வரும்.
- அப்போது, இந்த கலவையை நெய் தடவிய தட்டில் உடனடியாக ஊற்றி பரப்பவும். லேசாக ஆறிய பிறகு, விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மைசூர் பாக் ரெடி.