அக்டோபர் 27, சென்னை (Kitchen Tips): சோயா சங்ஸ் பயன்படுத்தி சுவையான பல்வேறு உணவுகளை செய்யலாம். அந்தவகையில், அருமையான சுவையில் சிக்கன், மட்டன் சுக்கா சுவையை மிஞ்சும் வகையில், சோயா சுக்கா செய்து சாப்பிடலாம். இது, பரோட்டா மற்றும் சப்பாத்திக்கு சிறந்த சைடிஷ் ஆகும். அப்படிப்பட்ட சுவையான சோயா சுக்கா (Soya Chukka Recipe) எப்படி செய்வது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். Mushroom Pakoda: காளான் பக்கோடா செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
- சோயா - 1 கப்
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 1
- கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
மசாலா பொடி அரைக்க தேவையானவை:
- எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
- தனியா - 2 மேசைக்கரண்டி
- மிளகு, சீரகம் - 1 தேக்கரண்டி
- வரமிளகாய் - 6
தாளிக்க தேவையானவை:
- எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- கிராம்பு - 2
- பட்டை - 2 துண்டு
- சோம்பு - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிதளவு
சோயா சுக்கா செய்முறை:
- முதலில் சோயாவை நன்கு சுத்தம் செய்து, தண்ணீரில் வேகவைத்து 2 முதல் 3 முறை தண்ணீரை மாற்றி, நன்கு பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து, வறுத்து பொடி செய்வதற்காக, கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், மிளகு, தனியா, வரமிளகாய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து, பின் ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- இதன்பின்னர், தாளிப்பதற்கு தேவையான பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை தாளித்து, அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- இதனையடுத்து மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, அரைத்த பொடி சேர்த்து, அதில் 1கப் தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை வேகவைக்கவும். அதில், கரம் மசாலா சேர்த்து, சோயாவை அதனுடன் சேர்த்து நன்கு வேகவிடவும்.
- இறுதியாக, தண்ணீர் வற்றி வரும்போது, அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான, சூடான சோயா சுக்கா தயார்.