செப்டம்பர் 26, சென்னை (Kitchen Tips): சிக்கன் வறுவலை மிஞ்சும் சுவையில், சோயா மசாலா வறுவல் (Soya Spice Roast) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இது சிறந்த சைடிஷ் ஆகவும், மதிய உணவுக்கு மிகவும் ருசியாக இருக்கும். இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சோயா உருண்டைகள் - 1 கப்
வெங்காயம் - அரை கப்
பச்சை பட்டாணி - 1 கப்
மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள், கரம் மசாலா - தலா 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
அரைக்க தேவையானவை:
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2. Vendhaya Kulambu: வெந்தய குழம்பு இப்படி செய்யுங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.. அசத்தல் டிப்ஸ் இதோ..!
செய்முறை:
- முதலில் சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு 15 நிமிடம் மூடி வைக்கவும்.
- பிறகு எடுத்துப் பிழிந்து இரண்டிரண்டாக நறுக்க வேண்டும். பின் பச்சைப் பட்டாணியை வேகவைத்து பொடி வகைகளை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- அடுத்து, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து இதனுடன் சோயா உருண்டைகள். பிசறிய பச்சைப் பட்டாணி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். ஏற்கனவே, கலந்து வைத்தவற்றைச் சேர்த்து மசாலா வாசம் போக நன்றாகக் கிளறிவிடவும்.
- பச்சை வாசனை போன பிறகு இறக்கி வைக்கவும். அவ்வளவுதான் சுவையான சோயா மசாலா வறுவல் ரெடி.