ஏப்ரல் 19, சென்னை (Kitchen Tips): சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாயாசத்தை விரும்பி உண்பர், அந்த வகையில், சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து எப்படி பாயாசம் செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கேரட் - 6
பால் - 1 கப்
வெல்லம் - தேவையான அளவு
தேங்காய் (பொடிபொடியாக நறுக்கியது) - சிறிதளவு
முந்திரி - 15
நெய் - தேவையான அளவு
உலர் திராட்சை - 10
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. Indian Students Death: அருவியில் குளித்த போது நேர்ந்த சோகம்; 2 இந்திய மாணவர்கள் பலி..!
செய்முறை:
முதலில் கேரட்டை தண்ணீரில் கழுவி,அதன் தோல் சீவி அதனை பொடிபொடியாக துருவி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், அடுப்பில் கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி, சூடானதும் அதில் துருவிய கேரட்டை போட்டு மிதமான சூட்டில் வதக்கிக் கொள்ளவும். பிறகு, அதனை ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். பின்பு, ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அடுப்பில் வைத்துக்கொள்ளவும். நெய் சூடானதும் அதில் முந்திரி, உலர் திராட்சை மற்றும் நறுக்கியுள்ள தேங்காய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், அதனுடன் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்துக்கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான கேரட் பாயாசம் ரெடி.