Sweet Corn Pakoda (Photo Credit: YouTube)

மார்ச் 12, சென்னை (Kitchen Tips): பொதுவாகவே குழந்தைகள் ஸ்வீட் கார்ன் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். ஸ்வீட் கார்னை பெரும்பாலும் குழந்தைகளுக்கு வேக வைத்து தான் சாப்பிடக் கொடுப்பார்கள். ஆனால், ஸ்வீட் கார்னைக் கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு அட்டகாசமான ரெசிபியை செய்யலாம். குறிப்பாக, மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது இது சூப்பராக இருக்கும். அப்படிப்பட்ட ஸ்வீட் கார்ன் பக்கோடா (Sweet Corn Pakoda) எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்ப்போம். Idli Podi Recipe: சுவையான இட்லி பொடி செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

ஸ்வீட் கார்ன் - 2 கப் (வேக வைத்தது)

வெங்காயம் - 1

கடலை மாவு - அரை கப்

அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

சாட் மசாலா - கால் தேக்கரண்டி

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - கால் தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் ஒரு பௌலில் வேக வைத்த கார்ன் மற்றும் வெங்காயத்தைப் போட்டு நன்கு கையால் பிசைந்து கொள்ளவும் அல்லது அவற்றை மிக்ஸியில் ஒருமுறை லேசாக அரைத்துக் கொள்ளலாம்.
  • பின் அதில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாட் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பெங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஸ்வீட் கார்ன் பக்கோடா ரெடி.