செப்டம்பர் 25, சென்னை (Kitchen Tips): பாதாம் அல்வா (Almond) சத்தான தென்னிந்திய இனிப்பு வகையாகும். பொதுவாக பண்டிகை நாட்களில் செய்து சாப்பிடுவர். வீட்டிலேயே சுவையாக பாதாம் அல்வா (Badam Halwa) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு - 1 கப்
முந்திரி பருப்பு - 10
சர்க்கரை - 1 கப்
நெய் - அரை கப்
பால் - 1 மேசைக்கரண்டி
வெள்ளரி விதை – 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் பொடி - 3 தேக்கரண்டி
கேசரி கலர் - 2 சிட்டிகை
குங்குமப் பூ - 1 சிட்டிகை. Eggless Omelette Recipe: முட்டை இல்லாமல் ஆம்லெட் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
செய்முறை:
- முதலில் பாதாம் பருப்பு மற்றும் முந்திரிப்பருப்பு இரண்டையும் 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
- பின், பாதாமை தோலுரித்துக் கொள்ள வேண்டும். பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு ஆகிய இரண்டையும் சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சவும். சர்க்கரை கரைந்ததும், அரைத்த விழுதையும் சேர்த்து கிளறிவிட வேண்டும்.
- நன்கு கலந்து ஒன்றாக சேர்ந்தவுடன் பாலில் குங்குமப்பூ, கேசரி கலர், ஏலக்காய் பொடி, கரைத்து கலவையில் சேர்க்கவும்.
- கலவை இறுக ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்துக் கிளறவும். பிறகு, கலவை நன்றாக இறுகி நெய் வெளியே வரும்போது, இறக்கி வெள்ளரி விதை சேர்த்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான பாதாம் அல்வா தயார்.