Eggless Omelette (Photo Credit: YouTube)

செப்டம்பர் 25, சென்னை (Kitchen Tips): முட்டையில் ஆம்லெட் (Omelette) செய்து சாப்பிடுவது பெரும்பாலும் அனைவருக்கும் பிடிக்கும். இது சாம்பார் சாதம், ரசம் சாதம் என அனைத்திற்கும் நல்ல சைடிஷ் ஆக இருக்கும். ஆனால், ஒரு சிலருக்கு முட்டை பிடிக்காது. எனவே முட்டை பிடிக்காதவர்களும், புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பவர்ளும் அசைவம் சாப்பிடக்கூடாத நிலையில் இந்த சைவ ஆம்லெட் செய்து சாப்பிடலாம். இந்த பதிவில் முட்டை இல்லாமல் சைவ ஆம்லெட் (Eggless Omelette) எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிதளவு

சமையல் சோடா - அரை தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. Kuzhambu Milagai Thool: வீட்டிலேயே சுலபமான முறையில் குழம்பு மிளகாய் தூள் தயார் செய்வது எப்படி..?

செய்முறை:

  • முதல் நாள் இரவே நன்கு கழுவி சுத்தம் செய்து வெள்ளை கொண்டைக்கடலையை ஊற வைத்துவிட வேண்டும். ஊறவைத்த கொண்டைக்கடலையை ஒரு மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பிறகு கொண்டைக்கடலையை ஒரு பவுலில் சேர்க்கவும்.
  • அரைத்த கொண்டைக்கடலையுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • அடுத்து, தக்காளியை பொடியாக நறுக்கி அதையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் மிளகாய்த்தூள், சிறிதளவு மஞ்சள் தூள், சமையல் சோடா, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • சிறிதளவு தண்ணீர் ஊற்றி இதனை நன்கு கரைத்துக் கொள்ளவும். அதிக கெட்டியாக இருந்தால் அடை போல ஆகிவிடும் எனவே வழக்கமாக முட்டை ஆம்லெட் செய்யும் பதத்திற்கு இதனை நன்கு கரைத்து வைக்கவும்.
  • இதன்பிறகு தோசை கல்லை காய வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஒரு கரண்டி நிறைய இந்த மாவை எடுத்து தோசை கல்லில் ஊற்றி மெதுவாக தேய்த்து சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும்.
  • அதன் மேல் தேவையான அளவு மிளகுத்தூள் தூவி இருபுறமும் திருப்பி நன்கு சிவக்க வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சைவ ஆம்லெட் ரெடி.