ஆகஸ்ட் 07, சென்னை (Kitchen Tips): ஜாம் என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். பிரட்டில் ஆரம்பித்து சப்பாத்தி, பிஸ்கட், தோசை என எல்லாவற்றிற்கும் குழந்தைகள் ஜாம் தடவி சாப்பிட விரும்புவர். அதற்காக ஜாமை கடையில் வாங்கி கொடுப்பதை தவிர்த்து, வீட்டிலேயே எளிய முறையில் சத்தான பீட்ரூட்டை பயன்படுத்தி பீட்ரூட் ஜாம் (Beetroot Jam) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 2
பேரீச்சம்பழம் - 10
சர்க்கரை - 100 கிராம்
நெய் - தேவையான அளவு
பாதம் - 5. Cup Cake Recipe in Tamil: ஓவன் இல்லாமல் குக்கரில் கப் கேக் செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!
செய்முறை:
முதலில் பீட்ரூட்டை தோல் சீவி கழுவி, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்து பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கிக் கொள்ள வேண்டும். பொடியாக நறுக்கி பீட்ரூட் மற்றும், பேரீச்சம்பழம் இவை இரண்டையும் நன்கு வேகவைக்கவும்.
வெந்த பிறகு அவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை போட்டு, தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும், அதனுடன் அரைத்து வைத்த பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறிவிடவும்.
அடுத்து, அதன் மேல் தேவையான அளவு நெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய பாதாமை தூவிவிட்டு நன்கு கிளறிவிட வேண்டும். இறுதியில் அடுப்பை அணைத்துவிட்டு, இதனை ஆற வைத்து ஒரு பாட்டிலில் அடைத்து 1 மாதம் வரை பயன்படுத்தலாம். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் ஜாம் ரெடி.