ஜூன் 08, சென்னை (Kitchen Tips): கத்தரிக்காயை (Brinjal) பெரும்பாலும் பொரியல், வறுவல், குழம்பு, சாம்பாரில் தான் போட்டு செய்து சாப்பிட்டிருப்போம். இதில், எண்ணற்ற சத்துகள் நிறைந்துள்ளது. இது எழும்புகளின் ஆரோக்கியதிற்கு உதவுகின்றது. இவ்வாறு பல்வேறு பயன்களை கொண்ட இந்த கத்தரிக்காயை வைத்து எப்படி சுவையாக பக்கோடா (Brinjal Pakoda) செய்வது என்பதனை இதில் பார்ப்போம். Fire Accident In the Train: பயணிகளின் சாதூர்யத்தால் தப்பிய ரயில் பெட்டிகள்: பீகார் ரயில் தீ விபத்தின் வைரல் காட்சிகள்..!
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 2
கடலை மாவு - 4 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 கரண்டி
மல்லித் தூள் - கால் கரண்டி
சாட் மசாலா, கரம் மசாலா - கால் தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பவுலில் கடலை மாவு, அரிசி மாவு, கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும். அதில் தண்ணீர் ஊற்றி, கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் கத்தரிக்காயை (Baigan) நன்கு நீரில் கழுவி, அதனை நீளமாகவோ அல்லது வட்டமாகவோ நறுக்கி நீரில் போட்டுக் கொள்ளவும். பின்பு, கத்தரிக்காயை எடுத்து அதில் உப்பு, மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்கு பிரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றி, கத்தரிக்காயை மாவில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணெயில் போடவும்.
இதே போல மீதமுள்ள துண்டுகளையும் பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான், ருசியான கத்தரிக்காய் பக்கோடா ரெடி.