ஆகஸ்ட் 16, சென்னை (Kitchen Tips): செட்டிநாடு ரெசிபிக்களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்றான செட்டிநாடு புளிக்குழம்பு (Chettinad Puli Kuzhambu) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம். இந்த புளிக்குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். மேலும், இதனை தயார் செய்வது எளிதாகும். அவற்றை எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - அரை கப் (தோலுரித்தது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பூண்டு - 10 பல் (தோலுரித்தது)
புளி - 1 எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு. Homemade Honey Lollipops: தேன் இருந்தால் போதும்.. வீட்டிலேயே லாலிப்பாப் செய்யலாம்..!
தாளிக்க தேவையானவை:
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா அரை தேக்கரண்டி
சோம்பு, வெந்தயம் - தலா கால் தேக்கரண்டி
வடகம், கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் புளியை தண்ணீரில் சுமார் அரை மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
பின்பு, அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு, அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, பின் சாம்பார் பொடி சேர்த்து கிளறி விடவும்.
அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு புளிக்குழம்பு ரெடி.