செப்டம்பர் 05, சென்னை (Kitchen Tips): தென்னிந்தியாவின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று நெய் அப்பம் (Ghee Bread) ஆகும். இது பெரும்பாலும் பண்டிகை நாட்களில் செய்து சாப்பிடுவர். இதன் வெளிப்புறம் மொறு மொறுப்பாகவும் (Nei Appam), உள்ளே மிருதுவாகவும் இருக்கும். இதனை மிகவும் சுவையாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 200 கிராம்
வெல்லம் - அரை கிலோ
தேங்காய் - 1 மூடி
ரஸ்தாளிப்பழம் - 2
நேந்திரம் பழம் - 1
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு. Kozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. கொழுக்கட்டை செய்வது எப்படி? விவரம் உள்ளே..!
செய்முறை:
முதலில் பச்சரிசியை சுத்தம் செய்து இயந்திரத்தில் கொடுத்து சற்று கரகரப்பாக மாவாக்கிக் கொள்ளவும். அடுத்து, வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.
கொதிக்கும் வெல்லக் கரைசலில் பச்சரிசி மாவை மெதுவாகத் தூவி, கட்டியில்லாமல் கரைத்துக் கொண்டு அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.
இந்தக் கலவையில் ரஸ்தாளிப்பழம், நேந்திரம் பழம், ஏலக்காய் தூள், சிறு சிறு துண்டுகளாக்கிய தேங்காய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை கரண்டியில் ஆப்பமாக ஊற்றி பொரித்தெடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொன்றாக பொரித்து எடுத்துக்கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான நெய் அப்பம் ரெடி.