Soya Mealmaker (Photo Credit: YouTube)

டிசம்பர் 31, சென்னை (Health Tips): அசைவ உணவுக்கு மாற்றாக மீல் மேக்கரை (Meal Maker) சைவ பிரியர்கள் சாப்பிட்டு வருகின்றனர். இதில், புரதம் அதிகமாக காணப்படுவதால், தினமும் உண்பவர்களும் இருக்கிறார்கள். சோயாவில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு அந்த சக்கையை உணவுப் பொருளாக தயாரிக்கப்படுகிறது. மீல் மேக்கரில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இதில், கொழுப்புகள் கிடையாது. இறைச்சிக்கு பதிலாக பிரியாணியில் இதை போட்டு சமைத்து கொடுத்தால் சைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுவர். ஆனால், அளவுக்கு மீறி எந்த உணவும் எடுத்து கொள்ளக் கூடாது. அந்தவகையில், மீல் மேக்கர் உண்ணும்போது ஏற்படும் நன்மைகள், தீமைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். Meal Maker White Kurma Recipe: மீல் மேக்கர் வைத்து சுவையாக வெள்ளை குருமா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

மீல் மேக்கர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

  • மீல் மேக்கரில் புரதம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. மீல் மேக்கரை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 100 கிராம் மீல் மேக்கரில் சுமார் 50 கிராம் புரதம் உள்ளது. இவற்றில் சிக்கன், மட்டன் மற்றும் முட்டையை விட அதிக புரதம் உள்ளது.
  • இதில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதால், இதய ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. மாதவிடாய் காலத்தில், பெண்கள் யோனி வறட்சி, மனநிலை மாற்றங்கள், தூக்க கலக்கம் மற்றும் இரவில் வியர்த்தல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர். சோயா துண்டுகளில் ஐசோஃப்ளேவோன்கள் உள்ளன. இது மாதவிடாய் தாக்கத்தைக் குறைக்க உதவும்.
  • தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், ஹார்மோன் சமநிலையை பராமரிக்கிறது. இவற்றில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சீரான மாதவிடாய்க்கு உதவுகிறது. மீல் மேக்கரில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும், இதயப் பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கும்.

மீல் மேக்கர் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:

  • தினமும் மீல் மேக்கர் சாப்பிட்டு வருவதால், அதாவது அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஹார்மோன் சமநிலை மாறிவிடும். இதனால், ஆண்களுக்கு சில முக்கிய பாதிப்பு ஏற்படுகிறது. மீல் மேக்கர் அதிகமாக எடுத்துக் கொள்ளும் சில குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் ஒவ்வாமை ஏற்படும்.
  • இதை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் நிறைய உற்பத்தியாக காரணமாகிவிடும். அதுமட்டுமல்லாமல், இதை உண்பதால் கனிம குறைபாடு கூட வரும். இதில், புரதம் தான் அதிகமாக காணப்படுகிறது. அதனால் மற்ற சத்து குறைபாடு வரலாம்.
  • இந்த மீல் மேக்கரில் இருக்கும் 'பைட்டோ ஈஸ்ட்ரோஜன்' நம்முடைய சிறுநீரக செயழிலப்பு பாதிப்புக்கு காரணமாகும். தாய்ப்பால் ஊட்டும் பெண்கள், கர்ப்பிணிகள் மருத்துவர்கரிடம் கேட்காமல் மீல் மேக்கர் உண்பதை தவிர்ப்பது நலம். பெரும்பாலும், நாம் உண்ணும் எல்லா உணவிலும் ஏதேனும் பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்கின்றன.
  • ஒரு நாளைக்கு 25 முதல் 30 கிராம் வரை மீல் மேக்கர் சாப்பிடலாம். ஆனால், பிற நோய்களுக்கு மருந்து எடுப்பவர்களுக்கு உணவு விஷயத்தில் மருத்துவர் அறிவுறுத்தல் மிகவும் அவசியமாகும்.

    குறிப்பு: மேற்கூறிய அறிகுறிகள் / தகவல்கள் பொதுவானவையே. உங்களுக்கு அதுசார்ந்த உடல்நலக்குறைவு / உடல் ஆரோக்கியம் தொடர்பாக சந்தேகம் இருப்பின், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம். மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் தேவைப்பட்டால் உடல் பரிசோதனை செய்து, மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப செயல்படலாம்.