Mushroom Chukka (Photo Credit: YouTube)

ஜூலை 30, சென்னை (Kitchen Tips): மாலை நேரத்தில் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் வகையில் காளானை (Kalan) வைத்து சுவையான ஒரு டிஷ் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான காளான் சுக்கா (Mushroom Chukka) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

காளான் - 200 கிராம்

பெரிய வெங்காயம் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 கரண்டி

சீரகம், பெருஞ்சீரகம் - 1 கரண்டி

மல்லித்தூள் - அரை கரண்டி

மிளகு - 1 கரண்டி

காஷ்மீர் மிளகாய் தூள் - 1 கரண்டி

கரம் மசாலா - அரை கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. Sambar Sadam Recipe: ஹோட்டல் சுவையில் கமகமக்கும் சாம்பார் சாதம்.. சுவையாக செய்வது எப்படி?!

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து சேர்த்து வறுக்கவும். பின் அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

சிறிதளவு கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு,சுத்தம் செய்து வைத்த காளானை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

பிறகு அதில் மிளகாய்த்தூள், கரம் மசாலா, மல்லித்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். காளான் மசாலாவுடன் நன்றாக பிரட்டி சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 5 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

பின்னர் பெருஞ்சீரகம், மிளகு, சீரகம் இவை மூன்றையும் இடித்து, அதனை வேக வைத்த காளானுடன் சேர்த்து கிளறிவிடவும். அவ்வளவுதான் சுவையான காளான் சுக்கா தயார்.