செப்டம்பர் 03, சென்னை (Kitchen Tips): நாம் ஹோட்டலுக்கு சென்றால் நாண் (Naan) வாங்கி சாப்பிட ஆசைப்படுவோம். நாண் மிகவும் சுவையாக இருக்கும். இதனை அனைவரும் வாங்கி சாப்பிடுவர். ஆனால், அதனை பெரும்பாலானோர் வீட்டில் செய்து சாப்பிட நினைத்தது இல்லை. அப்படிப்பட்ட நாண் ரொட்டியை வீட்டிலேயே சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மைதா - 500 கிராம்
புளிக்காத கெட்டித் தயிர் - அரை கப்
பால் - அரை கப்
சர்க்கரை - அரை தேக்கரண்டி
உலர்ந்த ஈஸ்ட் - முக்கால் தேக்கரண்டி
வெண்ணைய் - 4 தேக்கரண்டி
பேக்கிங் பௌடர், சமையல் சோடா - முக்கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு. Lemon Ginger Mint Juice Recipe: உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ் செய்வது எப்படி..?
செய்முறை:
முதலில் மைதாவோடு உப்பு, பேக்கிங் பௌடர், சோடா இவற்றை சேர்த்து 3 முறை நன்கு சலித்துக் கொள்ளவும். அடுத்து, ஈஸ்டை வெது வெதுப்பான பாலில் கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
பின்பு, சலித்த மாவை ஒரு அகலப் பாத்திரத்தில் கொட்டி, நடுவில் ஒரு குழி செய்து, அதில், ஈஸ்ட் கரைந்த பால், தயிர், சர்க்கரை இவற்றை ஊற்ற வேண்டும்.
ஒரு நிமிடம் கழித்து, உருகிய நெய் சேர்த்து மாவை நன்றாகக் கலக்கவும். மாவை பிசையும் போது, தேவைப்பட்டால் சுடுநீர் தெளித்து பிசையவும். பின்னர், ஒரு அகலமான் பேஸனில் சிறிது எண்ணைய் தடவி, மாவை அதில் போட்டு மேலே மெல்லிய ஈரத்துணிக் கொண்டு மூடி, அதன் மேல் ஒரு தட்டு வைத்து மூடவும்.
சுமார் 6 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு பிரட் மாவு போல பொங்கி இருக்கும். சிறிது பெரிய உருண்டைகள் செய்துகொள்ள வேண்டும். உருட்டுக் கட்டையால் கால் அங்குல தடிமனாக வட்டமாக உருட்டவும். ஒரு நுணியை கையால் இழுத்து பூசணி விதை போன்ற வடிவமாக்கவும்.
அதன் மேல்பக்கம் சிறிது தண்ணீர் தடவி, சூடான பாலின் மேல் தண்ணீர் தடவிய பக்கம் ஒட்டும்படி போடவும். மிதமான அளவில் வைத்து மேலே மூடியால் மூடிக்கொள்ள வேண்டும்.
பின்னர், மூடியைத் திறந்தால், நாண் உப்பி வந்திருக்கும். கைப்பிடியைப் பிடித்து, தலைகீழாகத் திருப்பி, அனலில் காட்டி மற்றொரு பக்கத்தை பொன்னிறமாக சுடவும். அவ்வளவுதான் சுவையான நாண் ரெடி. இதனை சிறிது வெண்ணைய் தடவி சூடாகப் பரிமாறவும்.