Tomato Rice (Photo Credit: YouTube)

ஜூலை 25, சென்னை (Kitchen Tips): வீட்டில் எளிய முறையில் செய்து சாப்பிடும் வகையில் நிறைய உணவு வகைகள் உள்ளன. அந்த வகையில் சத்தான, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான தக்காளி சாதம் (Tomato Rice) சுவையாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

தக்காளி - 3

வெங்காயம் - 2

காய்ந்த மிளகாய் - 2

பச்சை மிளகாய் - 1

பெருங்காயம் - அரை தேக்கரண்டி

நெய் - 2 மேசைக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

முந்திரி - 5

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

தண்ணீர் - 250 மில்லி லிட்டர்

உப்பு - தேவையான அளவு

வடித்த சாதம். Brinjal Potato Poriyal Recipe: கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் சுவையாக செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

செய்முறை:

முதலில் மூன்று மேசைக்கரண்டி அளவு கடலை எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, மிளகாய், சீரகம், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றை நன்கு வதக்க வேண்டும்.

அதனுடன், நறுக்கி வைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதங்கிய பிறகு அதில் நறுக்கி வைத்த தக்காளி, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தண்ணீரி ஊற்றி நன்கு கொதிக்கவிட வேண்டும்.

அதில், பச்சை மிளகாயை கீறி போடவும். அதனுடன், பெருங்காயம், நெய், தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி இலைகளை போட வேண்டும்.

இதன்பிறகு, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, அதில் வடித்த சாதத்தை போட்டு நன்கு கிளறிவிடவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி சாதம் ரெடி.