ஏப்ரல் 02, சென்னை (Health Tips): தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில், மக்களால் அதிகம் விரும்பப்படுவது கம்பங்கூழ். குறிப்பாக கோடைகாலத்தில் பல இடங்களில் கம்பங்கூழ் கடைகள் நிரம்பி இருக்கும். கோடையின் வெயிலில் இருந்து மக்கள் விடுபட, உடலுக்கு குளிர்ச்சியை தந்து, உடல்நலனை பராமரிக்கும் தன்மை கம்பங்கூழுக்கு உண்டு. அதனாலேயே முன்னோர்களும் கம்பு, கேப்பை போன்ற தானிய வகைகளில் கூழ் செய்து உணவாக சாப்பிட்டு வந்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரையில், பல்வேறு வீடுகளில் சாதாரணமாக புழங்கி வந்த கம்பு கூழ், இன்று கோவில் திருவிழா, சாலையோர கடைகள், கோடையில் மட்டும் கிடைக்கும் விஷயமாக மாறிவிட்டது.
கம்பங்கூழ் நன்மைகள் (Kambu Kool Nanmaigal):
கோடையின் வெப்பத்தினால் ஏற்படும் உடல் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வல்லமை கம்பங்கூழுக்கு உண்டு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என கோடை வெயிலின் தாக்கத்தால் பலரும் பாதிக்கப்படுவோம். வெயில்நேர பாதிப்புகளை கட்டுப்படுத்த கம்பங்கூழை குடிக்கலாம். கடைகளில் விற்பனை செய்யப்படும் ரசாயன குளிர்பானத்துக்கு பதில், ரூ.10 முதல் ரூ.20 என விற்பனை செய்யப்படும் கம்பங்கூழ் மிகச்சிறந்தது. இதனால் உடல் சூடு தணியும். இரத்தத்தில் இருக்கும் கழிவுகள் வெளியேறும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைத்து, அன்றைய நாளை சுறுசுறுப்புடன் செயல்படுத்த உதவும். Biscuits Dangerous: பசிக்கும்போது பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் உடையவரா நீங்கள்? ஷாக் தகவல் சொல்லும் மருத்துவர்கள்.!
இரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வு:
பரவலாக கம்பில் புரதசத்து அதிகம் உண்டு என்பதால், தலைமுடி உதிர்வு தொடர்பான பிரச்சனை உடையோர் கம்பு சாப்பிடலாம். வைட்டமின் ஈ, பி, உடலுக்கு தேவையான அமினோ அமிலம், பாஸ்பிரஸ், பொட்டாசியம், இரும்புசத்து, நார்சத்து ஆகியவையும் கம்பில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் மோர் சேர்ந்த கம்பங்கூழ் குடித்து வர உடல் சூடு கட்டுப்படும். உடலுக்கு ஆற்றல் அதிகம் கிடைக்கும். உடலில் தேங்கியுள்ள கேடான கொழுப்புகள் வெளியேற்றப்படும். இரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். உடல் எடையை குறைப்போர் கம்பங்கூழை தினமும் குடிக்கலாம்.
கம்பங்கூழ் செய்வது எப்படி (Kambu Kool Seivathu Eppadi):
இரவில் ஊறவைக்கப்பட்ட 100 கிராம் கம்பு, கால் கப் பழைய சாதம் அல்லது நொறுங்க பிசைந்த சாதம், அரை லிட்டர் தயிர், 10 சிறிய வெங்காயம், 4 பச்சை மிளகாய், சிறிதளவு மாங்காய் துண்டு, தேவையான அளவு கறிவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். கம்பை மட்டும் குக்கரில் வேகவைத்து எடுத்து, பிற அனைத்தையும் சேர்த்து நொறுங்க அடித்துக்கொள்ள வேண்டும். வீட்டில் மத்து வைத்திருப்போர், அதனை வைத்தும் மேற்கூறிய பொருட்களை சேர்த்து தயாரிக்கலாம். எளிமையான முறையில் சுவையான கம்பு கூழ் தயார்.