
பிப்ரவரி 19, சென்னை (Kitchen Tips): வீட்டில் தக்காளி சாதம் செய்து சாப்பிட்டுருப்பீர்கள். அந்த தக்காளி சாதத்துடன், பட்டாணியை சேர்த்து சமைத்தல் இன்னும் சுவையாக இருக்கும். காலையில் மட்டுமின்றி, மதிய வேளையிலும் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு இருக்கும். அப்படிப்பட்ட தக்காளி பட்டாணி சாதத்தை (Thakkali Pattani Sadam) எப்படி செய்வது என்று இப்பதிவில் பார்ப்போம். Rava Idli Recipe: அட்டகாசமான சுவையில் ரவை இட்லி செய்வது எப்படி..? மாவு இல்லாத நேரத்தில் டக்குனு பண்ணலாம்..!
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப்
பட்டாணி - 5 மேசைக்கரண்டி
தக்காளி - 4
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கிவிட வேண்டும்.
- பின்பு, அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி, பட்டாணியை சேர்த்து 5 நிமிடம் கிளறிவிடவும். பிறகு தக்காளி சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு 6 நிமிடம் வதக்கவும்.
- பின் அரிசியை கழுவிப் போட்டு, அரிசி மசாலாவுடன் நன்கு ஒன்று சேர கிளறிவிட வேண்டும். இறுதியாக, அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கினால், தக்காளி பட்டாணி சாதம் ரெடி.