
பிப்ரவரி 10, சென்னை (Kitchen Tips): சப்பாத்திக்கு ஏற்ற சைடு டிஷ் எதையாவது செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் பட்டாணி கிரேவி செய்து சாப்பிடுங்கள். இந்த பட்டாணி கிரேவி செய்வதற்கு வெங்காயம், தக்காளி தேவையில்லை. மசாலா பொடிகள் இருந்தாலே போதும். இதனை எளிதில் செய்யலாம். மிக முக்கியமாக இந்த பட்டாணி கிரேவியை வெறும் 15 நிமிடத்தில் செய்துவிடலாம். அப்படிப்பட்ட, பட்டாணி கிரேவி (Pea Gravy) சுவையாக எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்ப்போம். Masala Bread Recipe: காரசாரமான மசாலா பிரெட் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருள்கள்:
காய்ந்த பட்டாணி - 1 கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் காய்ந்த பட்டாணியை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும். பின் ஊற வைத்த பட்டாணியை குக்கரில் போட்டு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து குக்கரை மூடி, 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
- பின்னர், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு, பூண்டு பற்களை சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சீரகத் தூள் சேர்த்து கிளறிவிட்டு, வேக வைத்துள்ள பட்டாணியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். அவ்வளவுதான், சுவையான பட்டாணி கிரேவி ரெடி.