
மார்ச் 24, சென்னை (Kitchen Tips): கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் உடல் சூடும் அதிகரித்திருக்கும். நாக்கு வறட்சி ஏற்படும். அடிக்கடி தண்ணீர் தாகம் எடுக்கும். இவ்வாறு பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எனவே, கோடை காலத்தில் நம்முடை உணவு முறையில் மாற்றம் கொண்டு வருவது அவசியம். அதுவும், ஊட்டச்சத்து அதிகம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். அப்படியான நெஞ்சு எரிச்சல், வயிற்றுப் புண்களை சரி செய்யும், கோடை வெயிலுக்கு இதமாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட கூடிய தேங்காய் பால் வெந்தய கஞ்சி ரெசிபி (Thengaipal Kanji) எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்ப்போம். Masala Lemon Rice: சுவையான மசாலா லெமன் சாதம் செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!
தேவையான பொருட்கள்:
தேங்காய்ப் பால் - 2 கப்
அரிசி - அரை கப்
வெந்தயம் - 1 கரண்டி
செய்முறை:
- முதலில் அரிசியை நன்றாகக் கழுவி விட்டு, அரிசியுடன் சேர்த்து வெந்தயத்தையும் 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- பின்பு குக்கரை எடுத்து, அவற்றில் அரிசி மற்றும் வெந்தயத்தை சேர்த்து, அதில் அரிசி எடுத்த அதே கப்பில் ஒன்றரை கப் அளவிற்குத் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர், 4 அல்லது 5 விசில் விட்டு சாதத்தை நன்கு குழையும் வரை வேக விடவும். பிறகு, 10 நிமிடம் கழித்து குக்கரைத் திறந்து அதில் சிறிது மட்டும் உப்பு சேர்த்து விட்டு, கொஞ்சம் கொஞ்சமாகத் தேங்காய்ப் பாலை சேர்த்து மசித்து விடவும்.
- பிறகு, 5 நிமிடங்களில் தேங்காய்ப் பாலை சாதம் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி விடும். அவ்வளவுதான் சுவையான தேங்காய்ப்பால் வெந்தயக் கஞ்சி ரெடி.