டிசம்பர் 19, சென்னை (Kitchen Tips): நம் வீட்டில் இட்லி, தோசைக்கு பொதுவாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி மற்றும் சாம்பார் போன்றவை சைடிஷாக செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக, வீட்டில் வெண்டைக்காய் (Okra) இருந்தால், அதனை வைத்து ஒரு புதிய சட்னி ரெசிபியை செய்யலாம். அந்தவகையில், வெண்டைக்காயில் சட்னி செய்து சாப்பிடுவது சுவையுடன், ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இந்த வெண்டைக்காய் சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துக்கும் செம்ம டேஸ்ட்டாக இருக்கும். வெண்டைக்காய் சட்னி (Vendakkai Chutney) சுவையாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Chocolate Plum Cake: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சாக்லேட் பிளம் கேக் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 1 கப் (நறுக்கியது)
துருவிய தேங்காய் - அரை கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 2 துண்டு
வேர்க்கடலை - 2 கரண்டி
தேங்காய் எண்ணெய் - 2 கரண்டி
கடுகு - அரை கரண்டி
சீரகம் - அரை கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு சிறிய கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். 2 முதல் 3 நிமிடங்கள் வெண்டைக்காயை வதக்கி, நன்கு மென்மையாகும் வரை வதக்கிவிட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.
- அதன்பின் அவற்றை ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆறவைத்து, பின் மிக்ஸியில் மாற்றி துருவிய தேங்காய், வேர்க்கடலை, இஞ்சி மற்றும் கொத்தமல்லி இலைகளையும் சேர்க்கவும்.
- பின்னர், இதில் தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை நன்றாக பேஸ்டாக அரைத்து, சட்னியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். சட்னியை தாளிக்க ஒரு கரண்டியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
- இதனையடுத்து, பெருங்காயம் சேர்த்து தாளித்து சில நொடிகளுக்கு பின்னர் சட்னியில் ஊற்றவும். சட்னியை நன்கு கிளறிவிடவும். அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் சட்னி ரெடி.