டிசம்பர் 06, சென்னை (Kitchen Tips): வீட்டில் வாழைக்காய் இருந்தால் அதை வைத்து விதவிதமான ரெசிபிகளை செய்யலாம். வாழைக்காய் (Plantain) வைத்து பஜ்ஜி முதல் வறுவல் வரை அனைவருக்கும் பிடித்தமான ரெசிபிகளை செய்து சாப்பிடலாம். அந்தவகையில், வாழைக்காய் வறுவல் (Vazhakkai Varuval) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். இந்த வாழைக்காய் வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Tomato Kurma Recipe: இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான தக்காளி குருமா செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 2
பூண்டு - 5 பல்
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத் தூள் - 1 தேக்கரண்டி
கடுகு, உளுந்து - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சாம்பார்த்தூள் - 1 மேசைக்கரண்டி
இஞ்சி - 1 அங்குலம்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் வாழைக்காயின் தோலை நீக்கி சிறு நீளத்துண்டுகளாக நறுக்கி நீரில் போடவும். மிக்ஸியில் மிளகு, இஞ்சி, பூண்டு, சோம்பு போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பொடிகள் அனைத்தையும் ஒரு தட்டில் கொட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் வாழைக்காய்களை போட்டு பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் மாறும் வரை வறுத்து எடுக்கவும்.
- அதிலேயே மீதமுள்ள எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து அரைத்த விழுது, மசாலா பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து ஒருமுறை கிளறிவிட வேண்டும்.
- அதில், வறுத்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து நன்கு கிளறிவிட்டு சிறிது நேரம் மூடி வேகவைத்து இறக்கினால், சுவையான வாழைக்காய் வறுவல் ரெடி.