ஜனவரி 09, சென்னை (Chennai): பரங்கிக்காய் குளிர்ச்சியான தன்மை கொண்டது. இதனால் இது சர்க்கரை பூசணி எனவும் அழைக்கப்படும். இதில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும். தைப்பொங்கல் பண்டிகை உலகத் தமிழர்களால் சிறப்பிக்கப்படவுள்ள நிலையில், தைப்பொங்கல் அன்று செய்து சாப்பிடவேண்டிய பரங்கிக்காய் கூட்டு (Parangikai Kootu) எப்படி செய்வது என தெரிந்துகொள்ளுங்கள். இதனை வெண்பொங்கலுக்கும், சூடான சாதத்திற்கும் உங்களின் விருப்பத்திற்கேற்ப சாப்பிடலாம். பரங்கிக்காய் பெண்களுக்குள் ஏற்படும் வெள்ளைப்படுதல், பித்தம், மூலநோய், வயிற்று பிரச்சனைகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது ஆகும். Pongal 2025: "தை பிறந்தால் வழி பிறக்கும்" 2025 பொங்கல் வைக்க உகந்த நேரம்.. சிறப்புகள் இதோ..!
பரங்கிக்காய் கூட்டு (Yellow Pumpkin Kootu) செய்யத் தேவையான பொருட்கள்:
பரங்கிக்காய் - ஒரு கப்,
கடுகு - அரை கரண்டி,
உளுந்தம் பருப்பு- அரை கரண்டி,
சீரகம் - கால் கரண்டி,
பச்சை மிளகாய் - 1 அல்லது 2,
வர மிளகாய் - 1,
பூண்டு - 3 பற்கள்,
கறிவேப்பில்லை - சிறிதளவு,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
பெரிய வெங்காயம் - 1,
குழம்பு மிளகாய்தூள் - 1 கரண்டி,
மஞ்சள் தூள் - 1/4 கரண்டி,
சர்க்கரை - அரை கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
மல்லித்தழை - சிறிதளவு. Mattu Pongal 2025: "உழவனின் நண்பனுக்கு நன்றி சொல்லும் நாள்" - இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.!
செய்முறை:
- முதலில் எடுத்துக்கொண்ட பரங்கிக்காயை தோல் சீவி, விதைகளை நீக்கி சதையை சிறுசிறு துண்டாக வைத்துக்கொள்ள வேண்டும். விதை பிடிக்கும் என்பவர்கள், அதனை நன்கு சுத்தம் செய்து, உப்பு-மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்
- பின் வாணெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து தாளித்து, பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை, வர மிளகாய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். மிளகாய் நிறம் மாறத் தொடங்கியதும், பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். Mattu Pongal 2025: "உழவனின் நண்பனுக்கு நன்றி சொல்லும் நாள்" - இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.!
- பின் பரங்கிக்காய் சேர்த்து பச்சை வசம் போகும் வரை வதக்க வேண்டும். இதனை பச்சை வாசனை போகும் வரை உப்பு சேர்த்து வதக்கி, பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளற வேண்டும். விருப்பம் இருப்போர் இறுதியில் சிறிதளவு சீனி சேர்க்கலாம். லேசான கொத்தி வந்ததும், சிறிதளவு தண்ணீர் தெளிந்து பரங்கிக்காயை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். இறுதியில் கொத்தமல்லி தலைகளை தூவி பரிமாறலாம்.