Italy Forest Fire (Photo Credit: Twitter)

ஜூலை 26,  இத்தாலி (World News): ஐரோப்பா, அமெரிக்கா, ஆசிய நாடுகளில் கடந்த சில மாதமாகவே வெப்பம் கடுமையாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடந்த 1974ம் ஆண்டுக்கு பின் அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் 53 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவு செய்யப்பட்டது.

மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண பகுதிகளில் நிலவும் கடும் வெப்ப அலையினால் மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதேபோல, ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டத்திலும் வெப்பம் வரலாறு காணாத அளவு உயர்வை சந்தித்துள்ளது.

ஐரோப்பாவில் தற்போது வெப்ப அலைகளின் காரணமாக மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். அங்குள்ள இத்தாலி, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. MSD Vintage Rolls Royals: பழமை வாய்ந்த ரோல்ஸ் ராயல்ஸ் காரை கெத்தாக ஓட்டும் தல தோனி; ராஞ்சி சாலையில் அசத்தல்.! 

இயல்பாகவே குளிர்ந்த சூழ்நிலையில் வாழ்ந்த மக்கள், வெப்பத்தின் தாக்கம் தாள இயலாது தவித்து வருகின்றனர். இந்நிலையில், இத்தாலி நாட்டில் உள்ள Sicily தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள வனப்பகுதிகள் காட்டுத்தீ காரணமாக பற்றி எரிகிறது.

வெப்ப அலையினால் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக சிசிலி நகரில் உள்ள பலெர்மோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வெப்பநிலை தொடர்ந்து உயர்வதால் மக்கள் தவித்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.