ஜூலை 10, சென்னை (Cooking Tips Tamil): காலையில் எப்போதும் இட்லி, தோசை போன்றவை சாப்பிட்டு உங்களுக்கு பழகிவிட்டது என்றால் ஒரு மாறுதலுக்கு வெண்பொங்கல் செய்யலாம். வெண்பொங்கலை பொறுத்த வரையில் பலரும் கடை ஸ்டைலில் வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். ஹோட்டல் சுவையின் ரகசியம் தெரிந்து விட்டால் அதனை நீங்கள் வீட்டிலேயே செய்து அசத்தலாம். இந்த செய்தித்தொகுப்பில் ஹோட்டல் ஸ்டைலில் பொங்கல் செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 2 டம்ளர்,
பாசிப்பருப்பு - 1 டம்ளர்,
தண்ணீர் - 6 டம்ளர் ,
கொத்தமல்லி - சிறிதளவு,
நெய் - 4 கரண்டி,
மிளகு, சீரகம் - தலா 2 கரண்டி,
இஞ்சி - சிறிதளவு,
பச்சை மிளகாய் - 2,
கருவேப்பிலை - சிறிதளவு,
முந்திரி - சிறிதளவு,
பெருங்காயத்தூள் - 1 கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப.
சட்னி செய்ய :
தேங்காய் - 1/2 மூடி,
பச்சை மிளகாய் - 4,
பொட்டுக்கடலை - சிறிதளவு,
உப்பு - தேவைக்கேற்ப,
இஞ்சி - சிறிதளவு.
செய்முறை :
- முதலில் எடுத்துக்கொண்ட கொத்தமல்லி தழைகளை அரைக்கப் நீரூற்றி மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் குக்கரில் 2 கப் பச்சரிசி, 1 கப் பாசிப்பயறு சேர்த்து 6 கப் நீரூற்றி அரைத்த மல்லி விழுதை சேர்த்து 4 முதல் 5 விசில் வரை வைத்து இறக்க வேண்டும்.
- பின்னர் ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகத்தை சேர்க்க வேண்டும். பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்து இறக்கி சூடான நெய்யுடன் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பொங்கல் தயார்.
- ஹோட்டல் பொங்கலின் ரகசியமும் இதுதான். சட்னிக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து பொங்கலுடன் சேர்த்து சாப்பிட ஹோட்டல் ஸ்டைல் வெண்பொங்கல் தயாராகிவிடும்.