
ஜூன் 15, சென்னை (Cooking Tips Tamil ): பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளி, தேங்காய் துருவல் போன்றவற்றை பயன்படுத்தி சுவையான கொத்தமல்லி கார உருண்டையை நாம் வீட்டிலேயே செய்யலாம். அரைத்த விழுதாக இதனை தாளித்து சாப்பிடவும் செய்யலாம். எண்ணெயில் பொரித்து வடை போலவும் தட்டி சாப்பிடலாம். வானிலை: அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள்.. நாளைய வானிலை அறிவிப்பு இதோ.!
தேவையான பொருட்கள் :
ரவை - இரண்டு கப்,
கொத்தமல்லி தழை - சிறிதளவு,
பச்சை மிளகாய் - நான்கு,
தேங்காய் துருவல் - மூன்று கிண்ணம்,
நெய் - சிறிதளவு,
புளி - சிறிதளவு,
கடுகு - அரை கரண்டி,
உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு - இரண்டு கரண்டி,
பெருங்காயத்தூள் - அரை கரண்டி,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
முதலில் எடுத்துக்கொண்ட வாணலியில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், மல்லித்தழை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி மிக்ஸியில் விழுது போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து ஐந்து கப் நீரூற்றி அரைத்த விழுது, பெருங்காயத்தூள், உப்பு, நெய் சேர்த்து கிளறி விடவும்.
நன்கு கொதி வரும்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து ரவையை சேர்த்து பத்து நிமிடம் கழித்து எடுக்க வேண்டும். இதனை இட்லி தட்டில் வைத்து கொழுக்கட்டை போல வேகவைத்து எடுத்தால் சுவையான கார உருண்டை தயார். இதனை எண்ணெயில் சேர்த்து பொரித்தும் சாப்பிடலாம்.