ஏப்ரல் 17, சென்னை (Chennai): பொதுவாக அந்த காலத்தில் கவிதைகள் என்றால் மிகவும் பெரியதாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் கடினமான வார்த்தைகள் அனைத்தும் சேர்த்து சாமானிய மக்கள் புரிந்து கொள்வதற்கு கடினமான விதமாக இருக்கும். ஆனால் அதை அனைத்தையும் மாற்றியது என்றால் ஹைக்கூ கவிதைகள் தான். இந்த ஹைக்கூ கவிதை யானது முதன் முதலில் ஜப்பான் நாட்டில் தான் தோன்றியது. ஜப்பானிய கவிஞர் மசோதா சிகி முதன் முதலில் இந்த ஹைக்கூ கவிதைகளை (Haiku Poetry) எழுத ஆரம்பித்தார். இவர் கிட்டத்தட்ட 20,000 கவிதைகளை எழுதியுள்ளார். 1800 களின் பிற்பகுதியில் சிகியைத் தொடர்ந்து பல்வேறு ஹைக்கூ கவிஞர்கள் உருவாகினர்.
பின்னர் ஜப்பான் நாட்டில் இருந்து உலகெங்கிலும் ஹைக்கூ கவிதைகள் ஆனது பிரபலமாக ஆரம்பித்தது. தொடர்ந்து 1990களில் ஹைக்கூ கவிதைகள் ஆங்கிலத்தில் பிரபலமானது. ஹைக்கூவை எழுதிய முதல் மேற்கத்தியர் டச்சு கமிஷனர் ஹென்றிக் டோப் ஆவார். தற்போது இந்த ஹைக்கூ கவிதையானது கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் வந்துவிட்டது. குறைவான வார்த்தையை பயன்படுத்தி சமூகத்தில் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்துவதே ஹைக்கூ கவிஞர்களின் திறமையாகும். Jewelery Robbery: தனியாக வீட்டில் இருந்த பெண்ணை கட்டிப்போட்டு தங்க நகைகள் கொள்ளை - முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் தப்பி ஓட்டம்..!
சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சில ஹைக்கூ கவிதைகள் பின்வருமாறு:
தீப்பெட்டி
திறந்தால்
பிஞ்சு விரல்கள்
– ஸ்ரீரசா
கடலில் வலைவீசும் மீனவன்
கரையில் மீன்கொத்தி
முதலாளி
– அவைநாயகன்
மூடிய ஆலைக்குள்
சத்தம் கேட்டது
தொழிலாளர்களின் குமுறல்
– ஜி.மாஜினி
வீசாத வலைக்குள்
சிக்குண்டுத் தவிக்கிறது …
மீனவனின் பசி
– கா.ந.கல்யாணசுந்தரம்
அரிதாரம் கலைத்ததும்
அழத்தொடங்கினான்
நகைச்சுவைக் கலைஞன்
– வதிலைப் பிரபா
பூதங்கள் ஐந்து
வேதங்கள் நான்கு
பேதங்கள் எண்ணிலடங்கா
– வலசை வீரபாண்டியன்
செடி வளர்த்தோம்
கொடி வளர்த்தோம்
மனிதநேயம் ?
– இரா.இரவி