Deepawali 2023 (Photo Credit: Pixabay)

நவம்பர் 08, சென்னை (Chennai): உலகெங்கும் உள்ள இந்துக்களால் வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்படும் தீபஒளிப்பண்டிகை (Deepawali 2023), நவம்பர் மாதம் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பிக்கப்படுகிறது. இந்த நன்னாளில் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி பட்டாசுகளை வெடித்து மகிழ்வது வழக்கம்.

உறவினர்கள் வீட்டில் செய்த பலகாரங்கள் நமது வீட்டிற்கு அனுப்ப, நாம் அவர்களின் வீட்டிற்கு நமது வீட்டில் செய்யும் பலகாரங்களை பகிர்ந்து அன்றைய நாளின் கொண்டாட்டமும், உபசரிப்பும் மகிழ்ச்சியோடு இருக்கும். பொதுவாக இந்தியாவில் தீபாவளி வடமாநிலங்களில் வனவாசத்தை முடித்த ஸ்ரீ ராமர், தனது மனைவி சீதா தேவி, சகோதரர் இலக்குவன் ஆகியோருடன் நாடு திரும்பிய மகிழ்ச்சி கொண்டாட்டமாக நினைவுகூறப்படுகிறது. Egg Benefits: அடடே.. ஆயில் அதிரடி தகவல்.. முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடுவதால் இவ்வுளவு நன்மைகள்.! 

அதேபோல, அன்றைய நாளின் அம்மாவாசை திதி, சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் தீபாவளி கொண்டாடப்படும். ஆனால், தமிழ்நாடு (Tamil Deepawali) மற்றும் கர்நாடக மாநிலங்களில் பிரம்ம முகூர்த்தத்தின்போது, சூரிய உதயத்திற்கு முன்பு கொண்டாடப்படும். அதன்படி, நடப்பு ஆண்டில் பிரம்ம முகூர்த்தம் அதிகாலையில் 04:40 மணிக்கு மேல் 05:52 மணிக்குள் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் கால அளவு 01 மணிநேரம் 13 நிமிடங்கள் ஆகும்.

புராணங்களின்படி, மக்களை கடுமையாக துன்புறுத்தி வந்த அரக்கன் நரகாசுரனை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வதம்செய்த நாளினை, நரகாசுரனின் வேண்டுகோளுக்கிணங்க மக்கள் கொண்டாட்டமாக சிறப்பித்த நாளே தீபஒளியாக அமைந்து, பின்னாளில் தீபாவளியாக மாறிவிட்டது என்பது கூற்று.

நவம்பர் மாதம் 12ம் தேதி சிறப்பிக்கப்படும் தீபாவளி பண்டிகையானது, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஒருசேர பிரம்ம முகூர்த்தத்தில் அனுசரிக்கப்படும். புத்தாடை உடுத்த iஇறைவனை வழிபட்ட பின், பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டங்கள் தொடரும்.