
பிப்ரவரி 25, சென்னை (Festival News): சிவபெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாளாக மகா சிவராத்திரி (Maha Shivaratri) உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில், மகா சிவராத்திரி விழா சிறப்பிக்கப்படுகிறது. சிவபெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்துகொண்ட நாளையே மகா சிவராத்திரி தினமாக கொண்டாடுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. அன்று, மக்கள் சிவபெருமானையும் பார்வதியையும் வழிபடுகிறார்கள். இந்நாளில் சிவ பெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அன்றைய தினம், மாலை வேளையில் இருந்து இரவு முழுவதும் சிவபெருமானுக்கு (Lord Shiva)நான்கு கால பூஜைகள் நடத்தப்படும். Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி 2025; நாள், விரத வழிபாடு மற்றும் சிவனை வழிபட உகந்த நேரம் குறித்த முழு விவரம் இதோ..!
மகா சிவராத்திரி பூஜை:
மகா சிவராத்திரி (Maha Shivaratri Puja) அன்று, சிவ வழிபாடு செய்வதற்கு மாலை 6 மணிக்கு துவங்கி, மறுநாள் காலை 6.30 மணி வரை நடைபெறும். மொத்தம் நான்கு கால பூஜைகள் நடத்தப்படும். ஒவ்வொரு கால பூஜையும் சுமார் 3 மணிநேரம் நடைபெறும். மகா சிவராத்திரியின் நான்கு கால பூஜைகளில் மிகவும் முக்கியமானது மூன்றாம் கால பூஜை தான். இது, நள்ளிரவு 12 மணிக்கு துவங்கி, அதிகாலை 3 மணி வரை நடைபெறும். மூன்றாம் கால பூஜையின் முதல் 50 நிமிடங்கள் மிக மிக முக்கியமானதாகும். இந்த நேரத்தில் செய்யப்படும் பூஜைக்கு 'நிஷித கால பூஜை' என்று பெயர். இதுதான் சிவ பெருமானை வழிபடுவதற்கு (Shiva Vazhibadu) மிகவும் உகந்த நேரமாகும். இந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி புதன்கிழமை, மகா சிவராத்திரி அமைந்துள்ளது. அன்றைய தினம், இரவு 12.09 முதல் 12.59 வரையிலான நேரத்தில் சிவனிடம், என்ன வேண்டிக் கொண்டாலும் அது நடைபெறும். சிவன் பக்தர்கள் அனைவரும், நினைத்த காரியங்களை நிறைவேற்ற இந்த நேரத்தில் பக்தியுடன் வேண்டிக் கொள்ளலாம்.
இந்நன்நாளில் சிவபெருமானின் பக்தர்களுடன் பகிர வேண்டிய மகா சிவராத்திரி வாழ்த்து செய்திகள் (Maha Shivaratri Wishes in Tamil) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சிவனின் அருளால் உங்களுக்கும்
உங்கள் குடும்பத்திற்கும் நன்மை நடக்கட்டும்!
இனிய மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்..!

முழு பக்தியுடன் சிவராத்திரியை கொண்டாடுங்கள்
நீங்கள் வேண்டியதை சிவன் உங்களுக்கு கொடுப்பார்!
மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்..!

சிவாய நம! சிவமே ஜெயம்!
சிவமே தவம்! சிவனே சரணாகதி!
மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்..!
அன்றைய தினம் இரவு, தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சிறப்பு வழிபாட்டு பூஜைகள் கொண்டாடப்படும். மேலும், இந்தியாவில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெறும். சிவன் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிவனின் அருளை பெறலாம்.