Solar System (Photo Credit: Wikipedia Commons)

மே 10, வாஷிங்க்டன் டிசி (Washington DC): அமெரிக்கா அரசின் கீழ் இயங்கும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration NOAA) வளிமண்டலத்தில் நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்தும் கண்காணித்து வருகின்றன. இந்நிலையில், இன்று மாலை கடுமையான சூரிய புயல் ஒன்று உலகை தாக்குகிறது என நோவா தெரிவித்து இருக்கிறது. கடந்த 2005ம் ஆண்டுக்கு பின்னர் பூமியை தாக்கும் சூரிய காந்த புயல் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. TN SSLC Results 2024 On tnresults.nic.in: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; அரியலூர் டாப்... வெற்றியை தட்டித்தூக்கிய மாணவிகள்.. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவு.! 

காந்தப்புலத்தை சிதைக்க வாய்ப்பு: தற்போதைய காந்த புயல் பூமியை இயக்கும் கரோனால் மாஸ் எஜக்ஸன் (CME) விளைவால் ஏற்படுகிறது. மே 10 ம் தேதி முதல் மே 12 ம் தேதி வரை நீடிக்கும் காந்த புயலின் தாக்கத்தினால், பூமியின் காந்தப்புலத்தை சீர்குலைக்கும் சூரிய பிளாஸ்மா மற்றும் காந்தப்புலன்களில் பெரிய அளவிலான வெடிப்புகளும் ஏற்படும். கடந்த 20 ஆண்டுகளுக்கு பின் ஏற்படும் வலுவான சூரிய காந்த புயலின் தீவிரத்தால் செயற்கைகோள் சேதப்படுத்தப்படலாம். ஜிபிஎஸ், ரேடியோ அலைவரிசை, தகவல் தொடர்பு, மின் அமைப்பு போன்றவையும் பாதிப்பை சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.