டிசம்பர் 05, அலபாமா (Alabama): அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணம், செல்பி கவுண்டி, செல்சா சிட்டியில் கடந்த நவம்பர் 30ம் தேதி 3 மாதங்களான பச்சிளம் குழந்தை நாயினால் (Pet Dog Killed Baby) கடித்து குதறி உயிருக்கு போராடுவதாக அவசர அழைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தபோது உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. விசாரணையில், நரியில் இருந்து உருவான கலப்பின நாய், வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இந்த நாய் குழந்தையை கடித்து குதறியதில் சோகம் நடந்துள்ளது. அமெரிக்காவை பொறுத்தமட்டில் அந்நாட்டு அரசால் நரியில் இருந்து உருவாகும் கலப்பின நாய்கள், செல்லப்பிராணியாக வளர்க்கப்பட சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படுகிறது. பலரும் அதனை விரும்பி வளர்க்கவும் செய்கின்றனர். இதுவே அவர்களின் குழந்தைகளுக்கு எமனாக மாறுகிறது. Online Order Shocker: மளிகைப்பொருட்கள் ஆர்டர் செய்தவருக்கு மனிதக்கழிவை பார்சல் செய்த பகீர் சம்பவம்..! இப்படியும் நடக்குமா?..! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)