டிசம்பர் 31, திட்டக்குடி (Health Tips): ஒவ்வொரு நாளும் நாம் நமது எதிர்கால தேவைக்காகவும், அன்றாட நிகழ்வுகளை மேற்கொள்ளவும் உழைப்பை வெளிப்படுத்தி வருகிறோம். உடலில் இருந்து இழக்கப்படும் ஆற்றலை திரும்ப பெற தினமும் நாம் உணவுகளை எடுத்துக்கொள்கிறோம். அதிலும் சுழற்சி முறையில் கீரை வகை உணவுகளை எடுத்துக்கொள்வது மிகப்பெரிய நன்மையை வழங்கும்.
விருப்பத்திற்கேற்ப சாப்பிட்டு உடல்நலன் பெறுங்கள்:
அந்த வகையில், இன்று தன்னகத்தே பல சத்துக்களை கொண்ட பொன்னாங்கண்ணி (Ponnaganni Keerai) கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம். கீரை வகைகளில் பொன்னாங்கண்ணிக்கீரை அதிக சத்துக்களை கொண்டது. இரும்புசத்து உட்பட பல்வேறு உடல்நலனை வழங்கும் சத்துக்களை பொன்னங்கண்ணி கொண்டுள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதனை கட்டாயம் சாப்பிடலாம். பொன்னாங்கண்ணியை அரைத்தும், வதக்கியும், சாதம் போல கிளறியும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிடலாம். Hormonal Imbalance: பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை என்றால் என்ன? அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.. விபரம் உள்ளே..!
கண்களை வருத்தி வேலை பார்ப்போருக்கு வரப்பிரசாதம்:
சந்தைகளில் எளிமையாக கிடைக்கும் பொன்னாங்கண்ணி கீரையில் நீர்சத்து, கொழுப்பு, மினரல், இரும்பு, கால்சியம், பாஸ்பிரஸ், புரதம், சுண்ணாம்பு, வைட்டமின்கள் ஏ, சி சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. பொன்னாங்கண்ணியை அவ்வப்போது சுழற்சி முறையில் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் பொலிவை அதிகரிக்கும், முகம் பொலிவுடன் காணப்படும். கண்கள் சிவந்த நிறத்தில் இருப்போர், இரவு தூங்காமல் வேலை பார்ப்போர், எலக்ட்ரானிக் சாதனம் பயன்படுத்தி கண்களை வருத்திக்கொள்வோருக்கு பொன்னாங்கண்ணி கீரை வரப்பிரசாதம் ஆகும்.
மச்சிக்கல், வாய்துர்நாற்றம், இரத்தம் சுத்திகரிக்க:
இதனை கூட்டு, பொரியல் போலவும் செய்து சாப்பிடலாம். பொன்னாங்கண்ணியை பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகு ஆகியவை சேர்த்து வேகவைத்து மசித்து சாப்பிட இரத்தம் சுத்தப்படும். உடல் வலிமை பெற நினைப்போரும், மலச்சிக்கல், மூலநோய், வாய் துர்நாற்றம் உட்பட பல்வேறு பிரச்சனைகள் சரியாக பொன்னாங்கண்ணியை சாப்பிடலாம். பொன்னாங்கண்ணி கீரை மாடித்தோட்ட முறையில் எளிமையாக வீட்டிலேயும் வளர வைக்கலாம்.
உடல் வெப்பத்தை தணிக்கவும், உடனடி ஆற்றலை வழங்கவும், ஆஸ்துமா குணமாகவும் பொன்னாங்கண்ணி நல்லது.