Watermelon (Photo Credit: Pixabay)

மார்ச் 26, சென்னை (Health Tips): கோடைகாலம் வந்துவிட்டாலே சாலையோரத்தில், நுங்கு, சர்பத், தர்பூசணி பழங்கள் விற்கப்படும். கோடைகாலம் தொடங்கிவிட்டது என்றாலே தர்பூசணி பழத்தை பலரும் வாங்கி விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். இந்த பழத்தில் அதிக அளவு நீர்சத்து உள்ளது. வெயில் காலத்தில் நாம் குளிர்ச்சியாக இருக்கவேண்டும் என்று இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டு கொண்டு வருகிறோம். எனவே, தர்பூசணி கோடை காலத்தில் முக்கிய பழமாக இருந்து வருகிறது. கோடை காலம் தொடங்கிவிட்டது தர்பூசணி பழம் அதிகமாக சாப்பிடலாம் என்று சிலர் சாப்பிடுவார்கள். ஆனால், தர்பூசணி பழத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலுக்கு சில பிரச்சனைகளும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்களே கூறுகிறார்கள். அளவுக்கு அதிகமாக தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை இப்பதிவில் பார்ப்போம். Panangarkandu Benefits: எண்ணற்ற பயன்களை அள்ளித்தரும் பனங்கற்கண்டு.. தெரிந்து கொள்வோம்..!

இதய நோய்:

இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், தர்பூசணி சாப்பிட வேண்டாம். இதில் பொட்டாசியம் உள்ளது. இது இதயத் துடிப்புக்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.

இரத்த சர்க்கரை:

தர்பூசணி அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட ஒரு பழமாகும். இது உடலில் குளுக்கோஸை அதிகரிக்கும். எனவே, நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

சளி மற்றும் இருமல்:

தர்பூசணி ஒரு குளிர்ச்சியான விளைவைக் கொண்டுள்ளது. எனவே, அதன் நுகர்வு சளி மற்றும் இருமலின் போது பாதிப்பை ஏற்படுத்தும்.

அதிக நீரேற்றம்:

தர்பூசணியில் நிறைய தண்ணீர் உள்ளது. இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். ஆனால், அதிகமாக சாப்பிடுவது சோர்வு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கல்லீரல் வீக்கம்:

தர்பூசணியை அதிகமாக சாப்பிட்டால் கல்லீரலில் வீக்கம் ஏற்படும்.

செரிமான பிரச்சனை:

தர்பூசணியில் தண்ணீருடன் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றுப்போக்கு, வாய்வு, அமிலத்தன்மை போன்ற செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.

எவ்வளவு சாப்பிட வேண்டும்?

தினமும் 300 கிராமுக்கு மேல் சாப்பிடக்கூடாது. 100 கிராம் தர்பூசணியில் 30 கலோரிகள் உள்ளன.

குறிப்பு: இரவில் தர்பூசணி சாப்பிட வேண்டாம். இது செரிமானத்தை பாதிக்கும். எரிச்சல் சிண்ட்ரோம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.