ஆகஸ்ட் 01, காரனை (Chennai): சென்னையில் உள்ள மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ். இவரின் நண்பர் சோட்டா வினோத் என்ற வினோத். இவர் ஓட்டேரியை சேர்ந்தவர். இருவரின் மீது வண்டலூர், ஓட்டேரி, கூடுவாஞ்சேரி பகுதிகளில் பல குற்றவழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவர்களில் வினோத் காவல்துறை பதிவேட்டில் A+ ரௌடி, ரமேஷ் A ரௌடி.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக பிரமுகர் கொலை முயற்சி வழக்கில் இருவரும் குற்றவாளிகள் ஆவார்கள். இந்த விஷயம் தொடர்பாக மணிமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி இருவரையும் தேடி வந்தனர். இன்று அதிகாலை நேரத்தில் கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்..
அங்குள்ள கீரப்பாக்கம் - காரனை புதுச்சேரி சாலையில் வாகன தணிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டபோது, காரில் சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் ஆகியோர் வருகை தந்துள்ளனர். இவர்கள் காரை அதிகாரிகள் மறுத்தபோது நிறுத்தாமல், காவல் துறையினரின் வாகனத்தில் மோதி நிறுத்தினர். Shocking Video: 10வது மாடியில் இருந்து விழுந்த லிப்ட்; நொடியில் தாய்-மகனுக்கு காத்திருந்த நல்வாய்ப்பு.. பதைபதைப்பு வீடியோ உள்ளே.!
இதில் காவல் உதவி ஆய்வாளர் குருநாதன் என்பவர் லேசான காயம் அடைந்தார். அவரை ஆவேசத்துடன் இறங்கி கையில் வெட்டி தலையில் வெட்ட முயற்சித்த நிலையில், சுதாரித்த அதிகாரிகள் ரமேஷ் மற்றும் சோட்டா வினோத்தை சுட்டுப்பிடித்தனர். இவர்களுடன் இருந்த 2 பேர் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இருவரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது, அங்கு அவர்களின் உயிரிழப்பு மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் சிவகுருநாதன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இந்த தகவல் காவல் துறையினரின் பத்திரிகை செய்தியில் பகிரப்பட்டுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட சோட்டா வினோத்தின் மீது 10 கொலை, 15 கொலை முயற்சி, கொள்ளை உட்பட 50 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ரமேஷின் மீது 5 கொலை உட்பட 20 குற்றவழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.